INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, August 18, 2023

BALA KARUPPASAMI

 A POEM BY

BALA KARUPPASAMI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

The moon had been watching well before me.

In that night-light
the street-dog lying close to the doorstep
wakes up.
Turning all agitated within,
the words ‘please lie down , please lie down
struggle within my throat.
That I am residing in this building is known to it.
It knows that my authority stretches as far as
the threshold;
It thinks that I would attack;
It appeals not to do so;
‘If you have, give me some food’, it says.
‘I like this place’ it says.
Oh, the moonlight-dog,
with eyes as the downcast eyebrows
of the night-watchman -
what more are you pondering over?


நான் பார்ப்பதற்கு முன்பிருந்தே
நிலவு பார்த்துக்கொண்டிருந்தது
அவ்விரவொளியில்
வாசல்படியருகே படுத்திருக்கும் தெருநாய்
எழுந்துகொள்கிறது
உள்ளம் பதற படுத்துக்கொள் படுத்துக்கொள் என்று வார்த்தைகள் தொண்டைக்குள் தத்தளிக்கின்றன
இக்கட்டிடத்தில் நான் வசிக்கிறேன் என்று தெரிந்திருக்கிறது
வாசல்படி வரை என் அதிகாரம் நீண்டிருப்பதை உணர்ந்திருக்கிறது
நான் தாக்கக்கூடும் என்று நினைக்கிறது
தான் பலவீனமானவன் என்று சொல்கிறது
தன்னைத் தாக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறது
கொஞ்சம் உணவிருந்தால் போடு என்று சொல்கிறது
இந்த இடம் பிடித்திருக்கிறது என்று சொல்கிறது
இரவுக் காவலாளியின் சரிந்த புருவங்களைப்போல்
கண்கள் கொண்ட நிலவொளி நாயே
இன்னும் என்னவெல்லாம் நினைக்கிறாய்?

பாலா கருப்பசாமி

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE