INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

VIJENDRA

 A POEM BY

VIJENDRA


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


Trees that cover the long road
with loving hands

In the cool of shade

bird’s mating

The heart that goes fluttering afar

my love in your absence

Balloons that sway inside the

craving eyes of a kid

Desire is something multi-coloured.

Inside the condom thrown away

rain’s soft drizzle

Two poems in the language of wind

One is You folded

and your memory comes back to life

as the other one.

He who names the politician

who laughingly extends his hand with ease

from flags and placards

as the disease of politics

is named a lunatic

With some ascending

and some descending

some sleeping

some sitting

the footboard that has been a silent witness to all

run so speedily to be stamped by everyone

clinging to the bus that is to be burnt someday.

Night in white hue

and moon in black

cloud in red

I finish painting.

A sky earth-like

bowstring with razor-sharp arrow dozing.


நீண்ட சாலையை

அன்பின் கரம் கொண்டு

மூடும் மரங்கள்

நிழலின் குளிர்வில்

பறவையின் காதல்

சிறகடித்து தூர பறக்கும் மனது

நீயற்ற வேளையில் என் காதல்

ஏக்கத்தோடு நோக்கும்

குழந்தையின் கண்களுக்குள்

அசைந்தாடும் பலூன்கள்

ஆசை

பல வண்ணமானது

தூக்கியெறியப்பட்ட

துளையுள்ள ஆணுறைக்குள்

தூய மழையின் மென் சாரல்

காற்றின் மொழியில் இரு கவிதைகள்

ஒன்று மடிந்த நீ

மற்றொன்றாய் உயிர்த்தெழுகிறது

உன் நினைவு

பதாகைகளில்

கை நீட்டி சிரிக்கும்

அரசியல்வாதியை

அரசியல் வியாதியென

திருத்தமாய் கூறுபவனுக்கு

பைத்தியக்காரன் என்று பெயர்

சிலர் ஏற

சிலர் இறங்க

சிலர் உறங்க

சிலர் அமர

அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்த

படிக்கட்டு

மிதிபட ஓடுகிறது

என்றேனும் சாம்பலாகும்

பேருந்தை தொற்றிபடி

இரவை வெண்ணிறத்திலும்

நிலவை கறு நிறத்திலும்

முகிலை செந்நிறத்திலும்

வரைந்து முடிக்கிறேன்

புவி போலொரு வான்

கூர் வில் உறங்கும் நாண்..

 விஜேந்திரா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024