INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, August 18, 2023

Na.PERIYASAMI

FOUR POEMS BY

Na.PERIYASAMI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1.THE WEAVERBIRD

Revealing the secret of rain in its nest

It remained inside.
A traveller came to rest under the tree
and made the anguish of his native town
bereft of water into a song.
Telling a tale that had in it ponds turned into seeds
It made it fall into his hands.
With young girls fetching water
children played happily.
The youths swam towards the floating lotuses.
With scenes forever swelling

He walked on holding the seed of pond in his hand.


தூக்கணாங்குருவி

மழையின் ரகசியத்தை
தன் கூட்டில் உணர்த்தி
உள்ளிருந்தது.
வழிப்போக்கனொருவன் மரம் ஒதுங்கி
நீர் அற்றுப்போன தன் ஊரின்
தவிப்பைப் பாடலாக்கினான்.
குளங்களை விதைகளாக்கி வைத்திருக்கும்
கதை கூறி ஒன்றை அவன்
கைகளில் விழச் செய்தது.
குமரிகள் நீர் மொண்டபடி இருக்க
குழந்தைகள் விளையாடினர்
மிதக்கும் தாமரை நோக்கி
வாலிபர்கள் நீச்சலில்.
காட்சிகள் பெருக்கம் கொண்டபடி இருக்க
குளவிதையை ஏந்தி நடந்தான்.

ந. பெரியசாமி

2. ALEX TREE

He who came with the lilt and leap of a calf
just released from the cattle-shed
showed me his drawing.
“Banyan tree is beautiful” said I.
“No dad,
this is Alex tree”, said he.
Growing apprehensive
I hastened to correct him,
insisting.
Refusing to accept
he said
“No father
My tree
can have just my name.”

அலெக்ஸ் மரம்
ட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட
கன்றுக்குட்டியின் துள்ளாட்டத்தோடு
வந்தவன் காட்டினான்
வரைந்த ஓவியத்தை
ஆலமரம் அழகென்றேன்
இல்லப்பா இது
அலெக்ஸ் மரம் என்றான்
சரிசெய்யும் பதட்டத்தில்
மீண்டும் வலியுறுத்தினேன்
ஏற்க மறுத்தவன் கூறினான்
என் மரம்
என்பெயர்தான்.
----------------



3. BLUE SKY WHERE TINY FISH GO ZIGZAGING
Turning a blank sheet into a jungle
He strove hard and succeeded.
Clouds have formed
He made birds, elusive to the hunters,
to float
Growing grass
Planting trees
He built a house.
For light
he brought into being the Moon.
The sheet filled to the brim
he took another one
and began to create river.
“Damn this good-for-nothing fella…
Scribbling always”
Hearing his father’s voice
he became shell-shocked.
The river dried up
at the very start itself.

வெற்றுத் தாளை வனமாக்கியவன்
முயற்சியால் வெற்றிகொண்டான்
மேகங்கள் உருவாகியிருந்தன
வேடர்களுக்குச் சிக்காத
பறவைகளை மிதக்கச் செய்தான்
புற்களை உருவாக்கி
மரங்களை வளர்த்து
வீடொன்றைக் கட்டினான்
வெளிச்சம் வேண்டி
நிலவைப் பிறப்பித்தான்
நிறைவுகொள்ள
வேறுதாளை எடுத்து
நதியை உருவாக்கத் துவங்கினான்.
சனியன்
சதா கிறுக்கிக்கிட்டே இருக்கு.
அப்பாவின் குரல்கேட்டு அதிர்ந்தான்.
ஒரு நதி
துவக்கத்திலேயே வறண்டது.

ந.பெரியசாமி

4. THIS IS NO TALE-SPINNING
That day the sky was overcrowded with stars
in close clusters.
He was throwing the angler towards the sky.
Unable to comprehend, I asked.
He said he was catching the stars that have bloomed.
I asked him to show.
He said he had sent them
for telling tales
to weeping children.

இது கதையல்ல
அன்று வானம்
நெருக்கமான நட்சத்திரங்களோடு இருந்தது
தூண்டிலை
வான்நோக்கி வீசிக்கொண்டிருந்தான்
செய்கை புரிதலற்றிருக்க வினவினேன்
பூத்திருக்கும் மீன்களை
பிடிப்பதாக கூறினான்
பார்க்கக் கேட்டேன்
அனுப்பிவிட்டேனென்றான்
அழும் குழந்தைகளுக்கு
கதை சொல்ல.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024