A POEM BY
KAVITHAYINI LEESA
RENDERED IN English by Latha Ramakrishnan(*First Draft)
My grandma spun a tale
at night.
I could never believe it.
I approached some and enquired.
They said they knew nothing.
I asked Bhagyam of the adjacent street
sobbing
She catalogued
the July rampage
I walked on hearing all that.
My house too
caught in the exploding volcanic rock
breaking into splinters
was agonizing
at alarming pace.
தீப்பொறி.!!!
¶¶¶
என் பாட்டனை
அவர்கள்
அடைத்து வைத்ததாக
கதை சொன்னாள் பாட்டி
இராத்திரியில்...
என்னால் எப்போதுமே
அதை நம்ப முடியவில்லை...
சில மனிதர்களிடம்
விசாரித்துப் பார்த்தேன்
யாதுமே தெரியாதென்றார்கள்...
பக்கத்து தெருவிலுள்ள
பாக்கியத்திடம் கேட்டேன்
அவள் அழுகையோடு
அந்த ஜுலை கலவரத்தை
பட்டியலிட்டாள்...
கேட்டுக் கொண்டே நடந்தேன்...
என் வீடும்
தீப்பாறையில் சிக்கி
தவிடுபொடியாய் உருவம்மாறி
தவித்துக் கொண்டிருந்தது
அவசரமாக.!!!
கவிதாயினி லீஸா
No comments:
Post a Comment