INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

LAREENA ABDUL HAQ

A POEM BY

LAREENA ABDUL HAQ

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


FROM THE VERY BEGINNING.....

Like a stream it flowed

The usual cold had turned a little aggravated
“Isn’t this Markazhi” the heart reasoned.
The heart turned a baby not knowing to distinguish
between night and day.
It never had concerns about
Confines, Thorny crowns I frowned
I rewind the clock
The camera moves in flashback
I enter into three years of age
With darkness and pain i choke.
Fearing my sob to beheard outside i swallow it
And let it metamorphose into tears
Drying the flutter and shaking it off
It flowed in silence.
Deep oh deeper when i sink and struggle
You call me stretching your hand.
The knack of erasing some point
of dream’s spiral rim
And entering inside was not known to you.
That’s a secret game
Moulding shape from amorphous I turn alive
Within reach your fingers
The cat someone has reared rolled the clock, playing
The stream froze and turned into rock...
Once again I return to the frame
and become the painting.
It dawned.

முதலில் இருந்து...
==================
ஒரு நீரோடை போல் வழிந்தோடிற்று
இயல்பான சீதளம் சற்றே அதீதம் கொண்டிருந்தது
'மார்கழி அல்லவா?' மனம் தர்க்கம் கற்பித்தது
இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் தெரியாத
குழந்தையாயிற்று மனசு
வரையறைகள், முட்கிரீடங்கள் பற்றிய அக்கறைகள்
அதற்கிருக்கவே இல்லை என்று கடிந்துகொண்டேன்.
கடிகாரத்தை மறுவலமாய்த் திருப்புகிறேன்
கெமரா ஃப்ளாஷ் பெக்கில் நகர்கிறது
மூன்று வயதுக்குள் நுழைகின்றேன்
இருட்டும் வலியுழல்தலுமாய் தொண்டை அடைத்துக் கொள்கிறது
வெளிக்கேட்கும் அச்சத்தில் விசும்பலை விழுங்கி
கண்ணீராய்க் கூடுபாயச் செய்கின்றேன்
சலசலப்பை உலர்த்தி உதிர்த்து
நிசப்தமாய் வழிந்தோடிற்று
ஆழமாய்.. இன்னுமின்னும் ஆழமாய் மூழ்கித் தத்தளிக்கையில்
நீ கரம் நீட்டி அழைக்கின்றாய்
கனவுச் சுருள் விளிம்பின் ஏதேனுமொரு புள்ளியை
அழித்து உள்நுழையும் சூட்சுமம் உனக்குத் தெரிந்திருக்கவில்லை
அது ஒரு ரகசிய விளையாட்டு
அரூபத்தில் இருந்து உருத்திரட்டி உயிர்க்கிறேன்
எட்டும் தொலைவுக்குள் உன் விரல்கள்
யாரோ வளர்த்த பூனை கடிகாரத்தை உருட்டி விளையாடியது
நீரோடை உறைந்து பாறையாயிற்று
மறுபடியும் சட்டகத்துக்குத் திரும்பி
ஓவியமாகிறேன்.

விடிந்தது.

லாரீனா அப்து ஹக்

2. RESILIENCE

Night’s thoroughfare
where the fireflies of ecstasy
creep and wander
has snow-coating all over.
With resolute steps leaving the imprints of its being
the worm moves on inch by inch.
Here in this very moment
a night bird might prey on it
Some wagon’s wheels
might grind it
Someone like you
who enjoys the pain of others
with such ease
could stamp on it and squeeze it.
Yet….
weathering against all such impossibilities of existence
the tiny worm creeps ahead with perseverance

ஓர்மம்
பரவசத்தின் மின்மினிப்பூச்சிகள்
ஊர்ந்து திரியும் இரவின் சாலை
பனி குழைத்துப் பூசியிருந்தது
இருப்பின் தடத்தை ஊன்றிப் பதித்தபடி
அங்குலம் அங்குலமாய் நகர்கிறது புழு
இதோ இக்கணத்தில்
ஓர் இரவுப் பறவை இரையாக்கக்கூடும்
ஏதோ ஒரு வாகனச் சக்கரம்
அரைத்துவிட்டும் போகலாம்
இன்னொன்றின் வலியை
ஆசுவாசமாய் அனுபவிக்கும்
உன் போன்ற யாரேனும்
காலூன்றி மிதித்தும் சவட்டலாம்தான்
என்றாலும்...
வாழ்தல் மீதான இத்தனையித்தனை
அசாத்தியப்பாடுகளையும் மீறி
முன்னோக்கித் தவழ்கிறது சிறு புழு.

3. ONWARD JOURNEY
The path never makes an ‘about-turn’
It goes on stretching
for moving ahead
and meeting the bends and curves
With the joy of children who know not the way
I wish to wade through the dark obscurities
Directions melt and seep
Promises none to keep.
.
திரும்பிவருவதில்லை பாதை
முன்னோக்கி நகரவும்
திருப்பங்களை சந்திக்கவுமாய்
நீண்டு செல்கிறது
வழியறியாக் குழந்தைகளின் குதூகலத்தோடு
இருள்களைக் கடக்க விழைகிறேன்
திசைகள் திரவமாகி வழிகின்றன
வாக்குறுதிகள் என்று எவையுமில்லை.

4. THE MALICE OF THE FACELESS
Holding which end of the life that is not
she walk on the rope-ladder
_ so, with a malicious smile you kept looking on
The length of the short span between life and death
had swelled into a river sideways
whenever she tried to cross it
the night’s dream ends
life’s thirst doesn’t suffice
to drink death
the length of her dream’s wing
you cannot measure
When the jungle of Yakshi beyond imagination
smouldering gradually and turning into
raging fire
amidst the shimmer of ashes she sprouts softly.

முகமிலியின் வன்மம்
====================
இல்லாத வாழ்வின் எந்த அந்தத்தை பற்றிக்கொண்டு அந்த நூலேணியில் அவள் நடப்பாள் என்பதை
ஒரு வன்மப் புன்னகையோடு நீ பார்த்திருந்தாய்
இருப்புக்கும் இறப்புக்கும் இடையிலான குறிலின் நீளம்
பக்கவாட்டில் ஒரு நதியாகப் பெருக்கெடுத்திருந்தது
அவள் அதைக் கடக்கமுனையும் போதெல்லாம்
இரவின் கனவு தீர்ந்துபோய் விடுகிறது.
வாழ்தலின் தாகம் மரணத்தை அருந்தப் போதுமானதாயில்லை
அவள் கனவுகளின் சிறகு நீளத்தை நீ அளப்பதற்குமில்லை
கற்பனைக்கெட்டாத யட்சியின் காடு
மெல்லக் கனன்று திகுதிகுத்து எரிகையில்
சாம்பலின் சுடரிடை மெல்லெனத் துளிர்க்கிறாள்.


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE