FIVE POEMS BY
NESAMITHRAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
1. SHE WHO COUNTS THE CLOUDS The movements of the snake falling into the water with thorn twisted and pierced through
resembles the voice-tract of the wolf looking up at the moon and speaking.
Under the circus-tent floating in the flooded city
the cage with animal that knows swimming
keeps sinking gradually
At the entrance of Stem Cell Bank
the saliva oozing out of the
autism - afflicted mentally deranged female
counting the clouds,
conversing with soothing silence
drips
on the amulet made of umbilical cord
Upon the wait atop the beak that would peck at and open it
at the close of the final day,
remains the bird with yet to grow fluffs.
Standing in front of the receiver
the dumb bar-worker is smoking
his own song.
பிசகி ஏறிய முள்ளுடன்
நீரில் வீழும் பாம்பின் உடல்மொழி,
முழுநிலா பார்த்துப் பேசும்
ஓநாயின்
குரல்பாதையை ஒத்திருக்கிறது.
வெள்ளம் வந்த நகரத்தில்
மிதக்கும் சர்க்கஸ் கூடாரத்தின் கீழ்
நீந்தத் தெரிந்த மிருகம் உள்ள கூண்டு
மெல்ல மூழ்கியபடி
ஸ்டெம் செல் வங்கியின் வாசலில்
பதனத் தைலமிடப்பட்ட
மௌனத்திடம் கதைத்தபடி
மேகங்களை எண்ணுகிற ஆட்டிசப் பிச்சியின்
கடைவாயிழுகும் நீர்
சொட்டுகிறது
தொப்பூல் கொடி
அடைத்து செய்த தாயத்தின் மீது
இறுதிநாள் அடைக்குப் பின்
தன்னைக் கொத்தித்திறக்கும்
அலகின் மீதான காத்திருப்பிலிருக்கிறது
இன்னும் ரோமம் முளைக்காதப் பறவை
ஒலிவாங்கியின் முன் நின்று
புகைத்துக் கொண்டிருக்கிறான்
ஊமை பார்ஊழியன்
தன் பாடலை
2. SKY’S GOOSEBUMPS
These stars are the goosebumps that come
when in the foreplay of a communion
I ecstatically caress a body
set afire in an attempt at self-immolation
but yet survived
This crescent moon is the hanging- out tongue
of the watch dog
of a wine-shop opened at
early morn
that stretches its limbs
with head shaking
and front legs leaning backward
the lilies blossomed in the nakedness of the pond
resembles the fiery-eyed incense-sticks
emitting smoking on a tomb
The ants have devovoured the sunflower;
the fruit-eating bats gobble
at the clusters of grapes
hanging low as the breasts of pregnant woman
The body
stitched and handed over
giving no room to fall upon and wail
can ‘t be kept with us for long.
From somewhere seeps
the fragrance of the flower ‘Paalappoo’
ஆகாயத்தின் மயிர்க்கூச்சம்
---------------------------------------------------
தீக்குளித்து மரிக்காத உடலின்
தழும்புகளை ஒரு கூடலின்
முன்விளையாட்டில் தடவிக் களிக்கையில்
வரும் மயிர்க்கூச்சம்
இந்த நட்சத்திரங்கள்
தன் முன்னங்கால்கள் பின்சாய
தலைநடுங்க சோம்பல் முறிக்கும்
ஓர் இளங்காலை
மதுச்சாலையின் காவல் நாய்
நீட்டும் நாக்கு
இத்தேய் பிறை
கல்லறை மேல் புகையும்
தீக்கண் ஊதுபத்திகளை ஒத்திருக்கின்றன
குளத்தின் நிர்வாணத்தில் பூத்த
அல்லிகள்
சூரியகாந்திப் பூவை முற்றுமாய்
தின்றுவிட்டன எறும்புகள்
கர்ப்பவதியின் தனங்களாய்
தாழ்ந்த திராட்சைக் குலைகளைக்
காவுகின்றன பழந்தின்னி வவ்வால்கள்
விழுந்து அழ இயலாத
தைத்துக் கொடுக்கப்பட்ட உடலை
வெகுநாட்களுக்கு வைத்துக் கொண்டிருக்க
முடிவதில்லை
எங்கிருந்தோ கசிகிறது பாலப்பூவின்
வாசனை
(3)
names are lost no sooner than they are written
I left behind an
ultimate/armed alphabet.
All that those who
willingly pay their obeisance
to the great grand God
of Oblivion
place at Time’s altar
of sacrifice is but
sun’s ashes of those
days deeply relished.
In the liver of the
bird migrating beyond the continent
the seed of the fruit
savoured utmost .
In an unpredictable
wave of the sea
the reflection of it’s
abdomen for a split-second
winked as a wishfully
believable lie.
எழுதியதும் பெயர்கள் தொலையும் புத்தகத்தில் ஓர் ஆயுத எழுத்தை
விட்டு வந்தேன்
மறதியின் பெருந்தெய்வத்தை
விரும்பித்தொழுபவர்கள்
காலத்தின் பலிமேடையில்
வைப்பது மிகச் சுகித்த
நாள்களின் சூரியச் சாம்பலைத்தான்
கண்டங்கடக்கும்
வலசைப் பறவையின் இரைப்பையில்
மிக ருசித்த கனியின் விதை
கடலின் ஏதோ ஒரு அலையில்
அதன் அடிவயிற்று பிம்பம்
ஒரே ஒரு கணம்
நம்ப விரும்புமோர்
பொய் போல
சிமிட்டியது
(ஜூன் நினைவு)
(4)
Atop the tower of absurdity
a bird named Wonder
has laid eggs.
For someone to pray
each time it has to go flying and show
For love to hatch
how many more prayers
or
half-circles.
அற்புதம் என்ற பறவை
முட்டையிட்டிருக்கிறது
யாரோ பிரார்த்திப்பதற்கு
ஒவ்வொருமுறையும்
பறந்து காட்ட வேண்டியிருக்கிறதும்
கூட
அன்பு பொரிப்பதற்கு
இன்னும் எத்தனை பிரார்த்தனைகள்
அல்லது
எத்தனை அரை வட்டங்கள்
நேச மித்ரன்
(5)
The purse she had lost while getting into the festival day bus
forced the old lady to get off the bus midway.
She stands there speechless
holding the new clothes which she had bought for her
dear grandson
with the money of her tireless toil
the whole month
The sky turns darker and darker
She stood there visualizing the inferno of thieves
in that remote deserted bus terminus
till the time
someone approached her
seeing the cloth bag
and ascertaining her identity.
பண்டிகை நாள் பேருந்தில்
ஏறும் போது
பறிகொடுத்த பர்ஸ்
அந்த மூதாட்டியை
பாதி வழியில்
இறக்கி விடுகிறது
மாசம் முழுக்க உழைத்து
பேரனுக்கு வாங்கிய புத்தாடையுடன்
செய்வதறியாது திகைத்து நிற்கிறாள்
வானம் இருட்டிக் கொண்டு வருகிறது
திருடர்களின் நரகம் எப்படி இருக்கும்
என்று கற்பனித்துக் கொண்டிருந்தாள்
அந்த தனித்த பேருந்து நிலையத்தில்
யாரோ துணிப்பையை பார்த்து
நீங்கள் இன்னார் தானா என்று
கேட்கும் வரை
நேச மித்ரன்
No comments:
Post a Comment