INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

RANI THILAK

 TWO POEMS BY

RANI THILAK

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
1. DESTINY LEAFLIKE
I saw a withered leaf
fallen off the tree
leading a forsaken existence
with none to befriend
Its nerves are writhing in anguish
Having solitude as a perennial curse
staring at the tree so vacantly
for that ripe yellow leaf
no chlorophyll, nor compassion
It is surely going to rot
If withering and falling is fate
putrefying and perishing too
More so
it is not that of the leaf also.

விதி என்பது இலைதான்:
மரத்தில்
இருந்து உதிர்ந்து
உறவற்ற நிலத்தில் வாழும்
வதங்கிய ஓர் இலையை கண்டேன்
அதன் நரம்புகள் துடிதுடிக்கின்றன
தனிமையைத் தீராத சாபமாகக் கொண்டு
மரத்தை உற்று வெறுமையுடன் நோக்கும்
அந்த பழுத்த இலைக்கு
பச்சையமும் இல்லை, பரிதாபமும் இல்லை.
நிச்சயம் அது மக்கத்தான் போகிறது
உதிர்வது விதி என்றால்
மக்குவதும் விதிதான்
மேலும் அது இலையினுடையதும் அல்ல.

-ராணிதிலக்

(2)
I am wading through the road only
In the distant field
that peasant
shouts “Ooooo………..
beating his hands fiercely, again and again
Noises as like his anger
chase all over the space fervently
The storks hiding in the field
leap towards the sky.
He stopped hammering his hands
Now also I am crossing the road there
He is not
Nor the field
I go past the field
The storks are flying in the air
Those beating hands
pursuing
keep hounding me.

சாலையில் தான் போய்க் கொண்டிருக்கிறேன்
தூரத்து வயலில்,
அந்த உழவன்,
ஓ வென்று கத்துகிறான்.
கையை ஓங்கி ஓங்கித் தட்டுகிறான்.
அவன் கோபத்தைப் போல சப்தங்கள்,
வெளி எங்கும் பரபரத்து விரட்டுகின்றன.
வயலில் ஒளிந்திருந்த கொக்குகள்
வானை நோக்கிப் பாய்கின்றன.
அவன் கை தட்டுவதை, கத்துவதை நிறுத்தினான்.
இப்போதும் சாலையை
கடந்து கொண்டிருக்கிறேன். அங்கே,
அவன் இல்லை
அந்த வயலும் இல்லை
கொக்குகள் வானில் பறக்கின்றன
நான் வயலை கடந்துபோகிறேன்
அக் கைத்தட்டல்கள்
என் முதுகுக்குப் பின்னால்
துரத்தியபடி,
விரட்டுகின்றன.

-ராணிதிலக்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024