INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, December 7, 2019

TAMIL MANAVALAN's POEM


A POEM BY

TAMIL MANAVALAN


Rendered in Englisah by Latha Ramakrishnan



PHOTOGRAPHER

He has been a 
photographer

Only those who t
ake photographs 
are called so

But he is a photographer in having his 

photographs taken

Not just in this age of mobile camera

during those Konica days of black and

 white, colour film itself

he would operate the camera having 

fixed the time in advance

and stand in front of it

on par with today’s selfie.

Our picnics and tours with him would 

evolve with photographs.
While clicking if you say ‘Idli’ you can 

get a smiling face’

he would say.

He would teach me to take a deep

 breath for a few moments

thereby turning my paunch invisible.

Ignoring the request ‘Please look at the

 camera’

In disturbing the focus and standing at

 ease

there is none to excel him.

Taking a photograph with him

has always been a pleasant experience.

I gesture ‘don’t’ to my friend who 

attempts to click in mobile

the visual of my paying my homage to He

who is lying inside the glass casket coffin

For, I don’t want to have me

photographed with him

without uttering the word ‘idli’ to make

him smile

and with him who is unable to inhale 

deeply

so as to turn his paunch invisible.


புகைப்படக் கலைஞன்

அவனொரு புகைப்படக் கலைஞன்.
புகைப்படம் எடுப்பவர்களைத்தான் அப்படிச் சொல்வதுண்டு
எடுத்துக் கொள்வதில்
அவனொரு புகைப்படக் கலைஞன்.
அலைபேசியில் எடுக்கும் இப்போதல்ல
கறுப்பு வெள்ளை, கலர் ஃபிலிம் என்று கோனிக்கா
காலத்திலேயே.
காலதாமதம் கணித்து வைத்த காமிராவை
முடுக்கி விட்டு முன்நிற்பான்
இன்றைய செல்ஃபிக்கு இணையாக.
அவனோடு செல்லும் சிற்றுலாக்கள் பயணங்கள்
புகைப்படங்களால் வளரும்.
எடுக்கும் போது சட்டென
இட்லிஎன்று சொன்னால் சிரித்தமுகம்
கிடைக்குமென்பான்.
தொப்பை தெரியாமல் சில நொடிகள்
மூச்சிழுக்க சொல்லித் தருவான்.
காமிராவைப் பாருங்க’, என்னும் வேண்டுகோளைப்
புறக்கணித்தவனாய்
மையம் குலைத்து யதார்த்தமாய் நிற்பதில்
அவனுக்கு நிகர் அவனே.
அவனோடு புகைப்படம் எடுத்துக்கொள்வது
சுகமான அனுபவம்
குளிர் கண்ணாடிப் பேழையில்
படுத்திருக்கும் அவனுக்கு மரியாதை செய்வதை
அலைபேசியில் படமெடுக்கும்
நண்பனைத் தடுக்கிறேன்.
புன்னகை உருவாக்கஇட்லிஎனச் சொல்லாமல்
தொப்பை மறைக்க
மெல்ல மூச்சை உள்ளிழுக்கவியலா அவனோடு
படமெடுக்க எனக்கு விருப்பமில்லை
--
தமிழ்மணவாளன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024