INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, August 18, 2023

G.MAGUDESWARAN

 A POEM BY 

MAGUDESWARAN

rendered in English by Latha Ramakrishnan.(*First Draft)
For he who stood in the wordless space
there is no need to speak.
It was an ancient land with no camaraderie.
He didn’t see his mother.
First and foremost he saw the trees, plants and creepers
Then he heard the musical notes of birds.
Tender breeze that caresses us
It was an incessant cool jungle.
In the cool felt by him
forgetting one’s own self and straining with all his might
raising his voice
as splitting the throat
he has uttered a word with utmost effort.
Please be gracious enough to accept that sound as a word
- so I would beseech you.
Not doing that
oh, don’t regard him as a wild animal and aim at him
as if he is a dangerous species to be hunted down.
Go near him,
like a cat
he would kiss your feet
Just touch his head fondly.
Believing in your affection
he would close his eyes deeply.
Don’t ever look at his lips
that are too full of the sweet smell of fruits.
You would go crazy.
Unless you whole-heartedly invite him to come along
he would never pursue you.



சொல்லற்ற வெளியில்
நின்றவனுக்குப்
பேச வேண்டிய நிலை இல்லை.
தோழமையில்லாத
தொன்மை நிலம் அது.
அவன் தாயைப் பார்க்கவில்லை,
காடாய் விரிந்திருக்கும்
மரஞ்செடிகொடிகளைத்தான்
முதலில் பார்த்தான்.
பிறகு புள்ளினங்களின்
இசையொலிகளைக் கேட்டான்.
உடல்தீண்டும் இளங்காற்று
ஓயாத குளிர்வனம் அது.
தானுணர்ந்த தண்மையில்
தனைமறந்து குரல்முயன்று
தொண்டையைக் கீறியதுபோல்
ஒலித்தன்மை ஏற்றி
ஒரேயொரு சொல்லை
முயன்று கூறிவிட்டான்.
அந்த ஒலியைச் சொல் என்றே
ஏற்றருள்க என்று
உங்களை மன்றாடுவேன்.
அதை விடுத்து
அவனைக் கொல்விலங்குபோல் கருதிக்
குறிவைக்காதீர்.
அருகில் செல்லுங்கள்,
பூனையைப்போல்
உங்கள் கால்களை முத்தமிடுவான்.
தலையைத் தொட்டுக் கொடுங்கள்,
உங்கள் பாசத்தை நம்பி
கண்களை ஆழ்ந்து மூடுவான்.
பழவாசனை கமகமக்கும்
அவன் இதழ்களை
ஒருபோதும் நோக்காதீர்
மனம் பிறழ்ந்துடும்.
நீங்கள் வேண்டி அழைத்தால் ஒழிய
ஒருபோதும் பின்னால் வரமாட்டான்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024