INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, August 18, 2023

ILANGO KRISHNAN

 A POEM BY

ILANGO KRISHNAN

Rendered in English by Latha Ramakrishnan
THE SONG OF RADHA
"Greetings Kannaa"
"Greetings Raadhaa"
Poet Mu had called
Mmmm, what did he say?
‘He spoke about the poems of Sylvia Plath’.
‘Oh, fantastic!’
‘My poems resemble them, said she’
‘This is what she tells everybody’.
Then, she suggested that I should read Andal’s verses.
‘Muttuven Kol thaakuven Kol ‘– Haven’t you read that?”
‘Attrai Thingal Avvennilavil…”
Ha, that too is a nice love poem”
Not just that –
The Feminism that it propounds is indeed noteworthy..
Oh….
Ha yes, have you hear d of Julio Cortâzar?
a very important Post-Modernist.
What means Post-Modernism, Kanna?,
Poet Mu too said the same thing.
That is a very important ‘ism’.
Neo-poetry in Post-Modernist style?
Read M.G.Suresh”.
Mmmm, I will read,
is Athmanam a significant poet?
Who? Athmanam?
Yes of course.
Is there any poem-collection of him?
Just one.
Have you got his number?
I have, do you want it , Radha?

ராதைப்பாட்டு
---
வணக்கம் கண்ணா
வணக்கம் ராதா
கவிஞர் ம்யூ அழைத்திருந்தார்
ம்ம்ம் என்ன சொன்னார்
சில்வியா பிளாத் கவிதைகள் பற்றி பேசினார்
ஓ நல்ல விஷயம்
என் கவிதைகளில்
அவர் சாயல் இருக்கிறதாம்
அவர் இதைத்தான்
எல்லோரிடமும் சொல்கிறார்
அப்புறம் ஆண்டாள் கவிதைகள் படிக்கச்சொன்னார்
முட்டுவேன்கொல் தாக்குவேன் கொல்
நீங்கள் இதை படித்ததில்லையா
அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் அதுவும்
நல்ல காதல் கவிதை...
அது மட்டும் இல்லாம
அதுல இருக்கிற ஃபெமினிசம் முக்கியமானது...
ஓ....
ஆமாம் ஹூலியோ கிருஸ்தோவா கேள்விபட்டிருக்கீங்களா... முக்கியமான போஸ்ட் மாடர்னிஸ்ட்...
போஸ்ட்மாடார்னிஸ்ட்னா என்ன கண்ணா அதைத்தான் கவிஞர் ம்யூவும் சொன்னார்...
அது ஒரு முக்கியமான இசம்
நவீன கவிதைகள் போஸ்ட் மாடனிச பாணியில் இருக்கும்பாங்கா... எம்.ஜி.சுரேஷ் படிச்சுப்பாருங்க...
ம்ம்ம்... நான் படிக்கிறேன்...ஆத்மராஜன் முக்கியமான கவிஞரா?
யாரு ஆத்மாநாமா?
ஆமாம் அவர்தான்...
அவர் தொகுப்பு வந்திருக்கா?
ம்ம்ம் ஒரே தொகுப்பு வந்திருக்கு...
அவர் நம்பர் இருக்கா?
இருக்கு... வேணுமா ராதா?

இளங்கோ கிருஷ்ணன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024