INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

SU.SIVARAMAN

 A POEM BY

SU.SIVARAMAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


THE LAND OF LOVE


Plastic cups, all over the land
Feeling proud of shops multiplied
drunkenness keep rolling.
Oh, my love
We have lost that sea-soaked blue flower
In the streams where salt water and fresh water commune
Oh, my love
You come
Gasping for breath with the assault of coal-dust
How am I going to rescue you
I would never consent for your lips
to come anywhere near my coal-coated cheeks
How can we pass on this lungs turning into smoke-pipe
to our children
After drinking water offered for a price
alongwith those bottles
don’t we bury our future also....
Our Love
that sprouts to see
the fine land where water springs
as love that springs out of our passionate affection
gone away from this globe
and fallen headlong
has extended today till Kadhiramangalam, Neduvaasal.

காதல் நிலம்
நிலமெங்கும் இறைந்திருக்கின்றன
ஞெகிழிக் குவளைகள்
கடைகள் பெருகிய பெருமையில்
புரள்கிறது போதை
உவர்நீரும் நன்னீரும் புணரும்
ஓடைகளில் கடல்நீலம் சிந்தும் மலரை
தொலைத்து விட்டோம் அன்பே
நீ வருகிறாய்
நிலக்கரித் துகள்களால் மூச்சு முட்ட
என் கண்ணே
எப்படிக் காப்பாற்றப் போகிறேன் உன்னை
கரிபடிந்த என் கன்னங்களில்
உன் உதடு கவிய ஒருபோதும் ஒப்பேன்
புகைக்குழாயென மாறும்
இந்த நுரையீரலையா கொண்டுசேர்ப்பது
குழந்தைகளுக்கு
விலைக்குத் தருகிற நீரைப் பருகின பின்
அதன் புட்டிகளோடு
புதைக்கிறோமே எதிர்காலத்தை
நேசிப்பில் ஊறும் அன்பைப்போல்
நீரூறும் நல் நிலம்
இப்புவிக்கு வெளிச் சென்று
விழுந்து விட்டதைக் காணத் தலைநீட்டும்
நம் காதல்
இன்று கதிராமங்கலம்,நெடுவாசல் வரை நீண்டிருக்கிறது.

சூ.சிவராமன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024