INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

THAMIZH UDHAYA

 A POEM BY

THAMIZH UDHAYA



Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

The rims of oysters which refusing to doze off
go shifting to the dark abyss of sea
are probing the inflorescence of sleep
In the bone-jars of sorrow-filled suicidal boats
of the sea-horses
the thefts of language set aflame
remain lost.
Inside the bodies that murmur in the dungeon
with heavy iron planks
Nation’s knee-bones
sing the song of dirge.
The volcano of lives that burn in the eyes
as raging flames
in mid-sea unleashed
surrounds an all too expansive jungle
and lays it under siege
In Crosses still wet with blood
Babies are coming into being.
For lifting and carrying them
we with our backbone broken
are getting ready
The cannons and supersonic
Are getting ready to
Sprout again in the battleground
Jungle of wild dense bush spread
towards the land in heaps
The province of colossal wound
with scar that pricks and pains
The wells spring nuclear power plants
The shreds and remains of our
torn apart bodies
not turning dry and becoming manure
lie there rotten
Whoever rules us
what does it matter
Whoever digs the soil
the seed in slumber
is to get reenergized – right?
We are the killed again corpses of Nationalism.

உறங்க மறுத்து
கடலின் இருளாழத்தில் இடம்பெயரும்
சிப்பிகளின் முனைகள்
துயிலின் பூந்துணர்களை
துழாவிக் கொண்டிருக்கின்றன
கடற்குதிரைகளின் துயருற்ற தற்கொலைப்படகுகளின்
எலும்பு சீசாக்களில்
தீப்பற்றிய மொழியின் திருட்டுகள்
தொலைந்து கிடக்கின்றன
கனமான இரும்புப் பாளங்களுடன்
ஆழ்கிடங்கில் முணுமுணுக்கும் சரீரங்களுக்குள்
தேசியத்தின் முட்டி எலும்புகள்
முகாரி பாடுகின்றன
கண்களில் மூண்டெரியும்
உயிர்களின் எரிமலை
கடல் நடுவில் கட்டுக்கடங்காது
பெருங்காட்டைச் சுற்றி வளைக்கிறது
இரத்தக்கறை காயாத சிலுவைகளில்
பாலன்கள் பிறந்து கொண்டிருக்கிறார்கள்
தூக்கிச் சுமக்க
முள்ளெலும்பு ஒடிந்த நாங்கள்
தயாராகிக் கொண்டிருக்கிறோம்
மறுபடியும்
டாங்கிகளும் சுப்பர் சொனிக்கும்
போர் வெளியில் முளைத்து
பலியெடுக்க ஆயத்தமாகிறது
நிலம் நோக்கி
புதர்க்காடு புற்றெடுக்கிறது
காயப் பெரும் பிரதேசம்
உறுத்தும் தழும்பேறிக் கிடக்கிறது
கிணறுகள் அணு உலைகளை
ஊற்றெடுக்கிறது
கிழித்தெறியப்பட்ட
எங்கள் உடல் சிதிலங்கள்
உலர்ந்து மக்காது அழுகிக் கிடக்கின்றன
எங்களை யார் ஆண்டால் என்ன
யார் தோண்டினால் என்ன
விதைகள் உறங்குவது
வீரியம் கொள் முளை தகவுக்குத்தானே
நாங்கள் தேசியத்தின் மறுபிணங்கள்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024