TWO POEMS BY
THIRUGNANASAMBANDAN LALITHAGOPAN
The great grand quietude of
Time Immemorial
reflecting the continents
I am……
you the Sea that resounds
and hatch shores
as eggs….
In between the space of
the two hands of clock
that is yet to find out the foretelling
of Time……
On the day when Adam – Eve
christened
the heart would be freed from
the androgynous trance…
Thence
would commence
our curse against God.
புதிதாய்
வரையப்பட்ட
பூமியின் வரைபடம் .....
கண்டங்களை
பிரதிபலிக்கும்
யுகாந்திரத்து பேரமைதி நான் .....
கொக்கரித்து
முட்டைகளாய் கரைகளை
ஈனும் கடல் நீ ......
காலத்தின் தீர்க்கதரிசனங்கள்
கண்டறியப்படாத கடிகாரத்தின்
இரு முட்களின் இடைவெளிகளுள் ......
ஆதாம் – ஏவாள்
பெயரிடப்படும் நாளில்;
அர்த்தநாரீஸ்வர கிறக்கத்திலிருந்து
விடுபடும் இரு மனசு .....
அப்போது
தொடங்கும் பார்
கடவுளுக்கான நமது சாபம் ....
-லலித்தா-
(2)
scattered by tongues of fire
The exterior
imposes on you
the rise of Phoenix.
In the interior
Shiva of Sudalai, the crematorium
in thousands…..
With what would you fill the gap
between interior
and exterior?
Even after all the particles
have become part
of something
upon that which still lingers on
as the memory of those
who had lost their identity
a hand probes on…..
Thirugnanasampanthan Lalithakopan
தழல்கள் உதிர்த்த
சாம்பலாய்
இருக்கிறது மனசு ......
ஒரு பீனிக்சின்
எழுச்சியை திணிக்கிறது
புறம் ......
அகத்தில்
ஆயிரம் சுடலை
சிவன்கள்.....
அகத்திற்கும்
புறத்துக்குமான
இடைவெளியினை
எதை கொண்டு நிரப்புவாய் .....
எல்லா துகள்களும்
ஏதோவொன்றின்
கூறாகி போனபின்னும்.....
அடையாளம் தொலைத்த
மனிதர்களின் நினைவாக
இன்னும் இருக்கும்
அவர்களின் நினைவுகளின்
மீதான ஒரு துழாவுகை.....
No comments:
Post a Comment