I felt eager to teach it the colour of cloud.
I ask it to draw the raindrops.
Refusing, the child draws the star.
I say.
It draws the wings.
The bird is incomplete, I observe.
This is no bird at all, it says.
I don’t approve of it – says the child.
In that case, can you draw a river, I ask.
it clarifies.
‘You be yourself. I am hungry’.
and goes away.
நானும்-குழந்தையும்-பீட்சாவும்
அந்த
வானத்தை நீலமற்ற நிறத்தால்
வரைந்து
மேகத்தை வரைய
நிறம்
தேடும்
குழந்தைக்கு நான்
என்ன
நிறம்
மேகம்
என்று
சொல்லிக் கொடுப்பதில்
எனக்கு
பெரும்
ஆர்வமிருந்தது.
அதை
தவிர்த்து விடும்
குழந்தையிடம்
மழைத்துளிகளை வரையச்
சொல்லிக் கேட்கிறேன்
மறுத்து விடும்
குழந்தை நட்சத்திரத்தை வரைந்து விடுகிறது.
சரி
பறவையொன்றையாவது வரைந்து விடு
என்கிறேன்
சிறகுகளை வரைந்து விடுகிறது.
பறவை
முழுமை
இல்லையே என்றேன்
இது
பறவையே
இல்லையே என்கிறது.
தன்
கெட்டித்தனத்தால் என்னை
முட்டாளாக்குற குழந்தையிடம்
நான்
கேட்டேன்
ஒரு
கடலையாவது வரைந்து விடு
என்று
எனக்கு
கடலில்
உடன்பாடில்லை என்கிறது.
சரி
ஒரு
நதியை
உன்னால் வரைந்திட முடியுமா என்கிறேன்
எனக்கு
பிடித்ததை யாரும்
சொல்லித்தருவதில்
எனக்கு
விருப்பமில்லையென்கிறது.
சலிப்புற்று போனேன்
குழந்தையுடம் சொன்னேன்
நீ
நீயாக
இருந்து விடு
நான்
பசியாக
இருக்கிறேன் என்று
சிரித்து விட்டு
ஒரு
பீட்சாவை வரைந்து
கையில் தந்து விட்டு
செல்கிறது.
3. THE HUNGER THAT DEVOURED CHILDLREN
Children are the rulers of their world
Snakes, Lizards, cockroaches insects
Shiver at the sight of children
Children dread the adults
For hungry children suffice to have ice-cream or chocolate
to appease their hunger
Some steal away the tender body as bribe.
Those ‘Alari’ woods
Stone-rocks
and herds of sheep know
the identity of those.
Oh, I forgot to add
the liquor bottles and water buckets too know it
What bloody hunger is that
which humiliates your better half
who had been with you through thick and thin for years
sharing her bed with you.
Has the school uniform made you forget
the aroma of your woman
Has the odour of urine
made you forget the sweaty smell of your wife in passion
By scolding man an animal
I too get imprisoned in the beastly rage
Out of this fear I nurture no interest in
Being abusive
The child which you preyed upon
in your perverse lust
knows not for sure
that in your house her classmate Asifa is.
குழந்தைகள் அவர்களின் உலகத்தில்
அவர்களே மன்னர்கள்.
பாம்பு.பல்லி.கரப்பான் பூச்சிகளுக்கு
குழந்தைகள் என்றால் பயம்.
குழந்தைகளுக்கோ வளர்ந்த மனிதர்களென்றால் பயம்.
குழந்தைகளுக்கு பசியென்றால் ஐஸ் கிறீம்
சாக்லேட் போதுமானது.
இவர்களின் பசியை தீர்க்க
சிலர் உடம்மை லஞ்சமென திருடிக் கொள்கிறார்கள்.
அந்த அலறிக் காடுகளுக்கும்
கல் பாறைகளுக்கும்
ஆட்டு மந்தைகளுக்கும் தெரியும்
அவர்களின் முகவரி.
சொல்ல மறந்து விட்டேன்
சாராய போற்றல்களுக்கும்
தண்ணீர் பக்கட்களுக்கும் கூட தெரியும்.
அப்படியென்ன பசி
வருடக்கணக்கில் இல்லத்தரசியாய்
உனக்கு படுக்கையளித்த மனைவியை
கேவலப்படுத்தும் பசி.
முந்தானை வாசந்தனை
பள்ளிச் சீருடை மறக்கச் செய்ததோ
மனைவியின் வியர்வை வெட்கை
சின்னஞ்சிறு குழந்தைகளின்
மூத்திர வாடை மறைத்ததோ.
மனிதனுன்னை மிருகமென்று திட்டிவிடுவதால்
மிருகத்தின் கோபத்தில் கைதியாகி விடுவேனென்ற
அச்சத்தால் நான் திட்டிவிடுவதில் ஆர்வம்
கொள்ளவில்லை.
உன் விரச ஆசைக்கு
விருந்தான குழந்தைக்கு
சத்தியமாக தெரியாது
உனது வீட்டில்
அவளோடு படிக்கும் ஆசிபா இருக்காள் என்பது.
4. PRIMORDIAL MAN
I am the son of jungle
Mountain-man
Animals and birds
are my clan and feed too
We have never fought among ourselves
for our dwelling place
Truly those places are theirs.
Even before we originated
they were there as woods and mounts.
We have no chieftains.
Nor do they have.
Never was there any political rivalry.
Our race was peopled having hair of red-soil
Hue;
with skin-colour surpassing that of crow.
Nights are our favourites.
We are the primordial tribes
akin to flight between mountain-forests.
We hunt and eat
animals and birds
We had never hunted and killed a human.
For, we are primitives.
ஆதிக்குடியவன்
நான் வனப்புதல்வன்
மலை வாசி.
மிருகங்களும் பறவைகளும்
எனது உறவும் உணவும் கூட
எமது வாழ்விடங்களுக்காக நாங்கள்
ஒரு போதும் சண்டையிட்டுக் கொண்டது இல்லை.
நிசமாக அந்த இடங்கள் அவைகளதுவே
நாங்கள் தோன்றியதற்கு முன்னமே அவர்கள்
வனமாகவும் மலையாகவும்
இருந்தவர்கள்.
எமக்கு தலைமை கிடையாது
அவைகளுக்கும் தான்.
அரசியல் போட்டிகள் வந்ததேயில்லை.
எங்கள் இனம் செம்புழுதியையொத்த
முடியைக் கொண்டவர்கள்.
காகத்தை மெஞ்சிய நிறமுடையவர்கள்
எமக்கு இரவுகள் ரெம்ப விருப்பமானவை
மலைக்காடுகளிடையோன பறத்தலை
ஒத்த ஆதிவாசிகள் நாங்கள்.
..மிருகங்களையும் பறவைகளையும்
வேட்டையாடி தின்பவர்கள்
எதற்காகவும் நாங்கள் எங்களில்
ஒருத்தனை வேட்டையாடி கொன்றதில்லை.
ஏன் என்றால் நாங்கள் ஆதிவாசிகள்.
(5)
THE TREE AND I
Yesterday I could have a dialogue with the withered leaves
shed by the green tree.
The scorching heat of this summer sun
drove me to find repose under trees whose names
I know not.
Drops of sweat streaming all over
drench my being from head to foot.
I am enslaved by the tree’s shade.
Gradually the breeze dries my body and takes leave.
It is at this juncture that the tree began conversing with me.
“Hey – human, what do you think of the trees?”, it asked.
“There is an extraordinary intimacy between you and the rain”, said I.
“What sort of intimacy ?” enquired the tree.
“Why, had there never been any such closeness between you two?” asked I.
“How did you come to know of its presence?” asked the tree.
“I remember to have learnt it during my academic years” said I.
“Ha, it could be possible” – the tree observed.
“Can you elaborate on the relationship between you and the breeze?” asked I.
“Similar to the one between this sweat and the fatigue and you”. said the tree.
“If so, my weariness is gone now….”
“Then it is time for the wind to move on”, said the tree.
And, I began to sweat again.
Firoskhan Jamaldeen
மரமும் நானும்
பச்சை மரங்கள் உதிர்த்த சருகளுடன்
நேற்று உரையாடக்கிடைத்தது.
இந்த கோடைவெயிலின் அனல்
என்னை அந்த பெயர்தெரியா மரங்களுக்கு
கீழாக இளைப்பாற செய்தது.
வியர்வைத்துளிகள் கரைந்து என்னுடலை
முழுதுமாக நனைத்துச் செல்கிறது
மரத்தின் நிழலால் நான் ஆளப்படுகிறேன்
மெது மெதுவாக காற்று என்னுடலை
உலர்த்திச் செல்கிறது.
இப்போதுதான் மரம் என்னிடம்
உரையாடலை தொடர்ந்தது
மனிதா மரங்களைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்றது.
உங்களுக்கும் மழைக்கும் மிக நெருக்கமிருக்கிறதென்றேன்.
எப்படியான நெருக்கமென்றது
ஏன் அப்படியான நெருக்கம் உங்களுக்கு இருந்ததில்லையாயென்றேன்.
இருப்பதாக எப்படி நீ அறிந்து கொண்டாயென்றது.
கல்விக் காலங்களில் கற்றதாய் ஞாபகமென்றேன்.
ஓ..
இருக்கலாமென்றது.
இந்த தென்றலுக்கும் உங்களுக்குமான
உறவு பற்றி சொல்ல முடியுமாயென்றேன்.
மரம் சொன்னது
உனக்கும் இந்த வியர்வையுக்கும் களைப்புக்குமான உறவுதானென்றது.
அப்படியென்றால் இப்போது என்
களைப்பு தீர்ந்து விட்டதே.
அப்போ காற்று என்னை விட்டு
நகரும் நேரமென்றது.
எனக்கு மீண்டும் வியர்க்கத் தொடங்கியது.
..
ஜே.பிரோஸ்கான்
No comments:
Post a Comment