TWO POEMS BY
VEDHA NAYAK
Rendered in English by Latha Ramakrishnan (*First Draft)
For coming out of the pavilion
walking up to the Wicket
with all possible pomp and show_
Coming out of shadow and entering into
dazzling lights so suddenly _
so that my eyes getting accustomed
start functioning as usual¬
Walking unhurriedly to the pitch
of the ground
_ I am not going to undergo any training for all these
and more
For, my playground is
the vast universe always.
It is surrounded by Palmyra trees not dense
spacing out in between,
sometimes as boundary-lines too.
it won’t suffice to just stand inside the net
and keep playing different kinds of balls
and so gain expertise.
How long can I command the little boys
to do the bowling
Net-practise becomes
the important games in the ground.
That the body weight to become balanced
and being away with one leg firmly rooted
inside the court
all these never form a part of my game.
My existence is that of the hero’s expression
while dancing to ‘kutthuppaattu’ in gay abandon.
Observe a thing please;
Please bear in mind, underlined,
that how so important the leg-movements
for dancing
I deemed so, that for this game too
‘footwork is primary.
I was called a ‘grip-less’ batsman
when I once tried to hit a ball that came my way
That which played the role of bat
– the long reaper’ stick that lay there cast away
by the carpenter
slipping from my hand and landing
right on the head of a boy
who sat there with a water mug
under the tree-shade
and he began to bleed
As the fielding strategies of the rivals keep changing
every moment
my bowling spins prove awful always.
All my attention is being focussed
on observing the ball keenly.
Here, going past me
and entering inside
hitting one of those Neem-sticks
there falls a wicket.
பெவிலியனிலிருந்து விக்கெட்டிற்க்கு
ஆரவாரமாய் நடந்து
நிழலிலிருந்து திடீர் வெளிச்சத்திற்கு
வரவும் ;
என் கண்கள் அதற்கேற்றாற் போல்
சரியாய் இயங்க திடலின் கிரீஸூக்கு
மெதுவாகவும் நடக்கவும் நான்
பயிற்சி எடுத்துக் கொள்ளப் போவதில்லை.
ஏனெனில் எனது மைதானம்
எப்போதுமே வெட்ட வெளியே.
அடர்த்தியற்ற தூரப்பனை மரங்கள் சூழ்ந்தது.
சிலபோது பெளண்ட்ரி கோடுகளாக கூட...
வலையில் நின்று ஒவ்வொரு வகையான
பந்துகளையும் ஆடி ஆடி
தேர்ச்சிப் பெறுதல் நடவாது.
சிறு பிள்ளைகளை எவ்வளவு தான்
பந்து வீசச் சொல்லி அதிகாரமிடுவது.
வலைப்பயிற்சி என்பதே மைதானத்தில்
முக்கிய ஆட்டங்களாக மாறி விடுகின்றன.
உடல் எடை பேலன்ஸ் ஆகி பாதங்கள்
விலகியிருந்து கோட்டினுள் ஒரு பாதம்
பதிந்திருக்க வேண்டுமென்பதெல்லாம்
என் ஆட்டத்தில் சேருவதில்லை.
கண்ட மேனிக்கு குத்துப்பாட்டின்
நாயக பாவமே என் இருப்பு.
ஒன்றை கவனியுங்கள்
நடனத்திற்கு காலசைவு எவ்வளவு முக்கியமோ அதே போல்
இவ்வாட்டத்திற்கும் Footwork அவசியம்
என்று எடுத்துக் கொண்டேன் என்பதை
அடிக்கோடிட்டு நினைவில் நிறுத்துங்கள்.
நான் 'கிரிப்'பில்லா பாட்ஸ்மேன் என
ஒரு முறை வந்த பந்தை அடிக்க
முயன்று பேட் என்று சொல்லப்பட்ட
வீட்டு வேலைக்கு மரத்தச்சர் கைவிட்ட
நீள ரீப்பர் கட்டையானது நழுவிச் சென்று
தண்ணீர் சொம்புடன் மர நிழலில் அமர்ந்திருந்த
சிறுவனது மண்டையில் வாகாய்
விழுந்து ரத்தம் வழிந்த போது சொல்லப்பட்டது...
எதிரிகளின் பீல்டிங் அமைப்பு கணத்துக்கு கணம்
மாறிக் கொண்ட இருப்பதால் காட்டுத்தனமாய்
அடிக்க வேண்டி இருக்கிறது.
பெளலிங் வீச்சு படு மோசமாகவேதான்
அமைகிறது எனக்கு.
முழு சிந்தனை ,பார்வை அனைத்தும்
பந்தை உற்று நோக்குவதிலேயே இருந்து
விடுகிறது.
நாசமாக போகட்டும் ஓஷோ..
இதோ என்னைத் தாண்டி
உள்ளே சென்று வேப்பங்குச்சிகளில்
ஒன்றைச் சரித்து
இதோ விக்கெட் விழுந்துவிட்டது.
(2)
I work as a supervisor in a dye company
This is something so tiresome.
Something which would make you
Frown soon.
Here not only the seven hues
But apart from the primary colours
Sub-colours, shades-similar, and the contrasting ones
So dividing into three
Folding it inside as something else
There are innumerable sub-sects of strange combinations
Defined; determined.
Unfortunately
I had to enter inside the contrasting –colour section
On a noon for supervision.
Some which can never sync together
Lay there entwined
Eg: black and dark red
With all my limbs shaking
When I ran with my heels
Touching my n ape
And explained it all to the Manager
He cautions me in a soft voice
That he would dismiss me.
Raising my voice in front of him
I said that I would inform the government.
"Damn fool, what else is the style of functioning
of our Head Office"
said he and closed the subject
(*Red, Green, Blue – primary colours.)
ஒரு
வண்ண நிறுவனத்தில்
எனக்கு
மேற்பார்வையாளனாகப்
பணி.
இஃது
அயற்சியூட்டி
தளர்வடையச்
செய்து
விரைவில்
முகஞ்
சுருங்க
வைத்து
விடுவது...
இங்கு
ஏழு
நிறங்கள்
மட்டுமல்லாது
முதன்மை
நிறங்களைத்
தவிர்த்து
இணை
வண்ணங்கள்;
உப வண்ணங்கள்;
எதிர்
வண்ணங்கள்
என மூன்றாகப்
பிரித்து
உள்ளுக்குள்
மற்றொன்றாக
மடக்கி
பலப்பல
வினோத
கலவை
உட்பிரிவுகளாய்
பகுக்கப்பட்டிருக்கிறது...
துரதிர்ஷ்டவசமாய்
எதிர்
வண்ண
நிறங்கள்
பிரிவுக்கு
ஓர்
நண்பகல்
வேளையில்
ஆய்வுக்காக
உள்நுழைய
நேர்ந்தது...
பொருந்தவே
பொருந்தாத
சிலவை
டொன்று
முயங்கிப்
பின்னிக்
கிடந்தன...
எ. கா.
கருமையும்
அடர் சிகப்பும்.
எல்லா
அவயங்களும்
உதற,
பின்னங்கால்
பிடரியில்
பட
நா குழறியபடி
மேலாளரிடம்
விவரித்த
போது.,
பணி
நீக்கம்
செய்துவிடுவதாக
அமைதியான
மென்
குரலில்
எச்சரிக்கிறார்.
அவரெதிரே
குரலுயர்த்தி
அரசுக்கு
அறிவிப்பேனென்றேன்.
அட முட்டாளே
தலைமை
அலுவலகம்
இயங்குவது
எந்த
வகையில்
என்கிறாய்
?
என்று
முடித்துக்
கொண்டார்
சம்பாஷணையை
மேலும்
வளர்த்தாமல்.
No comments:
Post a Comment