A POEM BY
SHANMUGAM SUBRAMANIAM
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
For closing whose eyes wide awake on my sleep
I am intensely hasty your glowing forehead
enhances the stirs and quivers of our intimacy
With eyelids merging in the dark circles
that twinkle and swirl-
turning into icons we stand facing each other
throbbing
The fragrance exchanged on a day that came not
comes into your nose yet again
as attire disrobed by your heart
on an invisible corner I stay heaped as night.
Only the dampness of you flowing as water upon
plants full of tiny leaves sprouting and spreading
invites me to live with you.
Those fingers that touched
in the blurred abstraction of the dusky hour
without cleaving rise above
in front of us
inside the flower blossomed silver-tube shaped
we attain purity pristine.
எனது துயில்மீது விழித்திருக்கும்
யாருடைய விழிகளைச் சாத்திவிட படபடக்கின்றேன் -
பிரகாசித்திருக்கும் உன் நுதல்
நமது அந்தரங்கத்தின் அசைவுகளைக் கூட்டுகின்றது
மின்னிச் சுழலும் கருவட்டங்களில்
இமையிழைகள் சங்கமிக்க -
பிரதிமைகளாகி எதிரெதிரே துடித்தபடியே நிற்கிறோம்
தோன்றா நாளொன்றில் பரிமாறிய வாசம்
மீண்டும் நாசியில் தோன்றுகிறது
உன் உளம் கழற்றிய துகிலென
தென்படாத மூலையில் குவிந்திருக்கிறேன் இரவாய்
படரத்துவங்கும் சிற்றிலைகள் செறிந்த கொடிகளின்மீது
நீரென நீ வழிந்தோடியதின் பனித்தல் மட்டுமே என்னை உன்னுடன் ஜீவிக்க அழைக்கிறது
மங்கிய பொழுதின் தெளிவின்மையில் தீண்டிய அவ்விரல்கள்
பிளவுறாமல் மெலெழுகின்றன
நம்மிருவரின் முன்னே
வெண்குழல் வடிவாய் அலர்ந்திருக்கும்
பூவினுள் மாசின்மையை அடைகிறோம்.
- எஸ்.சண்முகம்
No comments:
Post a Comment