INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, August 10, 2022

S.FAIZA ALI

 A POEM BY

S.FAIZA ALI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE LAST SEAT

With scribbles beyond translation
and small cracks and fissures -
in all the classrooms there
remains a last seat.
With hair devoid of oil, untidy
and messy
pale shrunken uniform
with blue-drip unevenly spread
and shoes not shining
wearing a
semi-sad, semi-stubborn face
there sits always
the one for whom the seat belongs.
Does his widowed mother
lie forlorn, frozen
pondering over her life turned ashes
in a fire branched out of the ethnic violence
or in some other flames
In just one castigating shout
burying deep
all his dreams- not- come- true
floating in the roof
He would probe anxiously
the inside of his zip—torn school-bag.
Just as the remote hutment
sprouted far away from the residential area
in all activities he stands away
from his classmates
or made to stand away.
Thus
bearing always
in every class-hour
an all too tender heart
with confusion-confounded eyes
displaying its need for
extra-care and attention
yearning for love and kindness
there remains
a last seat
with half-closed zip
or, with shirt, button-torn.
Aaliya Aaliya

கடைசி இருக்கை
மொழிபெயர்க்க முடியாத கிறுக்கல்களோடும்
சிறு உடைசல்களோடுமாய்
எல்லா வகுப்பறைக்குள்ளும்
உட்கார்ந்திருக்கிறது
ஒரு கடைசி இருக்கை.
எண்ணெய் வரண்டும் செம்மை கலைந்துமான
பரட்டைத் தலையோடும்....
சொட்டுநீலம் சீராய்... பரவிடாத
சுருக்கம் கலைந்திடாத சீருடையோடும்...
நிறமுதிர்ந்தும்
பளபளப்புக் கரைந்ததுமான ஷ¤க்களோடும்...
பாதிசோகமும் மீதி முரட்டுப் பிடிவாதமுங் கலந்த
முகமணிந்தபடியுமாய்...
எப்போதுமேயதில் புதைந்திருக்கிறான்
அக்கதிரையின் சொந்தக்காரன்.
இதுவரை அணையாதெரிந்த
இனவன்முறையின் ஏதாவதொரு கிளைத்தீயிலோ
இல்லையேல் வேறெத்தழலிலோ
பொசுங்கிப்போன தம் வாழ்வெண்ணியே
பேதலித்துக் கிடக்கிறாளோ
அவனது விதவைத்தாய்.
கூரையில் மிதக்கும்
நிறைவேறாதக் கனவுகள் யாவையுமே
ஒரேயொரு அதட்டலுக்குள்
புதைத்தவாறே பதகளிப்போடு
கிளரத் தொடங்குவான்
ஸிப்பறுந்த தனது புத்தகப்பையை.
குடியிருப்பிலிருந்தும்
மிகத்தூரமாய் முளைத்திருக்குமொரு
எல்லைப்புறக்குடிசை போலவே
எல்லா செயற்பாடுகளிலும்
தன் சகபாடிகளை விட்டும்
ஒதுங்கியே நிற்கிறான் அல்லது
ஒதுக்கப் பட்டிருக்கிறானவன்.
இவ்வாறே
ஒவ்வோர் பாடவேளையிலும்
பின்னூட்டலுக்கும் விசேடபரிவுகளுக்குமான
தன்னிலைப்பாட்டினை
மருளும் விழிகளினூடே
ஒழுகவிட்டபடி
அன்பையும் கருணையையும்
அவாவி நிற்குமோர்
பிஞ்சு இதயத்தை
எப்போதுமே சுமந்தபடி
எல்லா வகுப்பறைக்குள்ளும்
உட்கார்ந்திருக்கிறது
ஒரு கடைசி இருக்கை
பாதி மூடிய ஸிப்புடனோ அல்லது.
பொத்தான் அறுந்த சட்டையுடனோ..!

எஸ். ஃபாயிஸா அலி.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE