A POEM BY
RIYAS QURANA
Precisely for watching this night
that has shrunk to the size of an insect
I am seated in the mountain-slopes.
I am striving hard to
change the night into its normal self
before people throng there
The laws of imagination
did not allow it.
Eventually chasing it
It went away flying
and entered into a lone cipher.
As I moved closer and saw
I could see that it had no doors.
Then how did it enter inside?
After the spell of imagination
the magical chant to come out of it
are erased by words.
That ‘s why anybody and everybody can read.
Riyas Qurana
புல்வெளிகளிலும்
பள்ளத்தாக்குகளிலும்
பறந்து திரிகிறது இரவு.
ஒரு பூச்சியளவில்
சிறுத்த அந்த இரவை
பார்ப்பதற்கென்றே
மலைச்சரிவுகளில் அமர்ந்திருக்கிறேன்.
சனங்கள் கூடுவதற்கு முன்
பழையபடி இரவை மாற்றிவிட
முயன்றபடி இருக்கிறேன்.
கற்பனையின் விதிகள்
அதற்கு இடந்தரவில்லை.
கடைசியில், அதை விரட்டப்
பறந்து சென்று
தனித்த பூச்சியம் ஒன்றினுள்
நுழைந்துவிடுகிறது.
அருகில் சென்று பார்க்கையில்
அதற்குக் கதவுகள் இல்லை என்றறிகிறேன்.
எப்படி நுழைந்திருக்கும்?
கற்பனை செய்த பிறகு
அதிலிருந்து திரும்பி வருவதற்கான மந்திரத்தைச்
சொற்கள் அழித்துவிடுகின்றன.
அதனால்தான், எவராலும் வாசிக்க முடிகிறது.
No comments:
Post a Comment