THE TALE OF ELDER BROTHERS -1
We were little boys
As the typical trait of a typical elder brother
cheating this younger one
The whole of my snacks he relished to his heart’s content
Leaving me behind
He would go for playing cricket....
Never once had he allowed me to sit in his cycle.
One day he injured me with the Compass arrow.
For that he was beaten by father
Seeing, I in between weeping and sobbing
laughed a little.
THE TALE OF ELDER BROTHERS – 2
Elder brothers all too suddenly turned into adults.
As if erasing without a trace his
boyhood and adolescence
with his nature undergoing a complete makeover
shouldering responsibilities soon
he came and stood in front of me...
unable to tolerate the sight
of the one grown old
I shoved him with the back of my hand.
THE TALE OF ELDER BROTHERS – 3
Younger brothers forsaken in their teens
Are rescued and brought ashore
By elder brothers
sacrificing their youth....
Why did my elder brother who fare better in studies
Turned into a dropout....
Why did my elder brother a better player than me
Stopped playing altogether...
My elder brother blessed with more friends than I
Oh, why did he leave them all – Oh Why....
Even while sleeping poverty
was by his side
Suffocating him with pillow.
Not allowing it to choke me even in dream
He remained there keeping vigil, so firm
THE TALE OF ELDER BROTHERS – 4
Father I hated with all my heart
And, I regarded my elder brother as my father
When elder brothers put on the mantle of father
We can cunningly exploit them...
I bit a handful of him and swallowed...
Father picked a handful of him and gulped....
I feigning innocence of a child
Picked up a handful of him again
As a means of my livelihood.
Is it taking revenge oh him for snatching away
a handful of my snacks
years before as children...
But, here too mother in all
Remained with hunger as usual
That way, he my elder brother began
acquiring her semblance
with the passage of time.
After all he was mother’s darling son... Oh, my...
THE TALE OF ELDER BROTHERS – 5
Both of us have grown up
We walked on our hand round th other’s shoulder...
Went on with our heads standing erect in pride....
Wearing same colour shirt we roamed around...
Then, two with two dissimilar disposition
In our traits
wagons going in opposite directions
True there would be some semblance...
Wont’ it suffice
for the two of us to wear
shirts of the same shade – Oh hear!
THE TALE OF ELDER BROTHERS – 6
Both of us have grown old.
We have become elderly persons.
Two grown-ups are allowed by none
to remain as brothers senior and junior..
Time had snatched us by its mouth
and took away and thrown off
in one end of the street
and on the other corner...
As two puppies abandoned
We two brooding over being alone
in a street where all are
Not having the support of any dog of our own
Wept every now and then....
THE TALE OF ELDER BROTHERS – 7
Time and again I would remember all too well
tears would brim and swell
but, how can a man cry – said one
take the stick and break his head with it said I.
with responsibilities multiplying
cracks surfacing in relationships
is a certainty.
If tried to stick the broken pieces
Money would curl and twirl there
like a snake
Surpassing all that
For remembering elder brother
no need for thousand reasons...
Suffice to have two little boys going in front
sporting shirts of the same colour....

(*Dedicated to the elder brothers of the entire world
And to my own dear elder brother Gopi)
அண்ணன்கள் கதை 1
நாங்கள் பாலகர்களாக இருந்தோம்
ஓர் அண்ணனுக்கே உரிய
வழமைபோல் இந்தத் தம்பியை ஏமாற்றி
என் தீனி மொத்தத்தையும் அவனே தின்றான்..
என்னை விட்டுவிட்டு
கிரிக்கெட் விளையாடப் போவான்...
என்னை ஒரு நாளும்
அவனுடைய சைக்கிளில் ஏற்றியதே இல்லை..
ஒரு நாள் காம்பஸ் அம்பால்
என் பாதத்தைக் காயப்படுத்திவிட்டான்
அப்பா அதற்கு அவனுக்கு அடி கொடித்தார்;
நான் தேம்பத் தேம்பிய அழுகையினூடே
ஒரு கையளவு சிரித்தேன்.
அண்ணன்கள் கதை 2
அண்ணன்கள் திடீரென வளர்ந்துவிடுகிறார்கள்..
தன் பிராயத்தைச் சுத்தமாகத் துடைத்து
யாரிடமோ தந்துவிட்டதைப் போல
குணமே மொத்தமும் மாறி
சீக்கிரம் பொறுப்பை ஏந்தி
அவன் கண் முன்னே நின்றான்...
நான் ஒரு வயசாளியைக் காணப் பொறுக்காது
என் புறங்கையால் அவனைத் தள்ளிவிட்டேன்.
அண்ணன்கள் கதை 3
பதின்மத்தில் கைவிடப்பட்டத் தம்பிகளை
அண்ணன்கள் கரை சேர்க்கிறார்கள்..
தன் பால்யத்தைக் காவு கொடுத்து...
என்னை விட நன்றாகப் படிக்கும் அண்ணன்
ஏன் படிப்பை நிறுத்தி விட்டான்.
என்னை விட நன்றாக விளையாடும் அண்ணன்
ஏன் விளையாட்டை நிறுத்திக் கொண்டான்.
என்னை விட நிறைய நண்பர்கள் வாய்த்த அண்ணன்
ஏன் அவர்கள் எல்லோரையுமே துறந்தான்..
தூங்கும் போதும் வறுமை
அவன் தலைமாட்டில் உட்கார்ந்தபடி
தலையணையை வைத்து அழுத்திக் கொண்டிருந்தது
அந்தக் கனவிலும் அது என் மூச்சை அழுத்தாதபடி
அவன் எனக்குக் காவலிருந்தான்...
அண்ணன்கள் கதை 4
அப்பாவை நான் கடுமையாக வெறுத்தேன்..
அண்ணனை நான் அவர் ஸ்தானத்தில் இருத்தினேன்...
அண்ணன்கள் அப்பாக்களின் பொறுப்பை ஏற்கும் போது
நைச்சியமாக நாம் அவன்களைச் சுரண்டலாம்..
நான் ஒரு கவளம் அவனைப் பிட்டுத் தின்றேன்...
அப்பா ஒரு கவளம் அவனைப் பிட்டுத் தின்றார்...
நான் சிறுபிள்ளையின் பாவத்துடன்
மீண்டும் அவனில் ஒரு கவளம் எடுத்துப் பிழைப்பாற்றினேன்;
பால்யத்தில் என் தீனியை அவன் பிடுங்கித் தின்றதற்குப்
பழிவாங்கலா இது...
ஆனால், இங்கும் அம்மா வழமைபோல்
பசியுடனேயே எஞ்சினாள்
அந்தவகையில், அவன் அவள் சாயலைக்
கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுமந்து வந்தான்;
என்ன இருந்தாலும் அம்மா பிள்ளை இல்லையா; ம்க்கும்...
அண்ணன்கள் கதை 5
இருவரும் வளர்ந்துவிட்டோம்...
தோள் மேல் கை போட்டு நடந்தோம்...
கால் கால் போட்டு நடந்தோம்...
ஒரே வண்ணச் சட்டையை உடுத்திப் பவனி வந்தோம்...
பின்னே, குணத்தில் ரெண்டும் வேறு வேறு
நடத்தையில் ரெண்டும் எதிரெதிர் வண்டிகள்...
அசப்பில் கொஞ்சம் ஒத்துமையுண்டு...
ஆனால், இதுபோதுமன்றோ
இருவரும் ஒரு கலர் சட்டை போட..
அண்ணன்கள் கதை 6
இருவருக்கும் வயதாகிவிட்டது..
இருவரும் பெரியவர்கள் ஆகிவிட்டோம்...
இரண்டு வளர்ந்தவர்களை அண்ணன் தம்பிகளாக
இருக்க யாரும் அனுமதிப்பதில்லை...
காலம் எங்களைத் தன் வாயால் கவ்விக்
கொண்டு போய்ப் போட்டு விட்டது...
தெருவின் அந்தக் கதியிலும்
இந்த மூலையிலும்...
கைவிடப்பட்ட இரண்டு பப்பி நாய்க் குட்டிகளைப் போல
நாங்கள் இருவரும் எல்லோரும் இருக்கும் வீதியில்
ஒரு சொந்த நாயின் துணையில்லாததை எண்ணி
அவ்வப்போது கேவி அழுதோம்...
அண்ணன்கள் கதை 7
அவ்வப்போது தோன்றும்
அழுகை முட்டிக் கொண்டு வரும்
ஆண் மகன் அழுதால் ஆகுமா... என்றான் ஒருவன்...
அந்தத் தடியை எடுத்து அவன் தாடையை உடை என்றேன்.
பொறுப்பெல்லாம் கூடிப் போனபின்னே,
உறவுகள் விரிசல் காண்பதுறுதி...
மறுமுறை ஒட்ட நினைத்தால்...
பணமொரு பாம்பு போல் நெளியும் குறுக்கே...
அதைத்தாண்டி அண்ணனை நினைக்க...
ஆயிரம் காரணங்கள் வேண்டியதில்லை...
இரு பாலகர்கள் போனால் போதும் முன்னே
ஒரு வண்ணச் சட்டைப் போட்டு...
(உலகின் மொத்த அண்ணன்களுக்கும்
என் அண்ணன் கோபிக்கும்...)
No comments:
Post a Comment