surging in the heart sans sound
are thoughts any and all....
Those who have been exploited and let down
by the merciless external conversations
Unable to keep the sound of thoughts
under leash
start conversing with the wind
wandering in the street
and branded lunatics.
If the pond within
turns into a fountain of compassion
It wouldn’t be disturbed by any stone
thrown within.
In crystal clear tranquility
the rain-pond would shine
in supreme brilliance.
ஒலியற்று தனக்குத் தானே மனத்துள் பொங்கும் சுயஉரையாடல் தான்
எண்ணங்கள் யாவுமே..
இரக்கமற்ற வெளி உரையாடல்களில் ஏமாந்தவர்கள்
எண்ணஒலியவற்றின் சுயகட்டுப்பாடு மீறி
தெருவில் காற்றுடன் பேசுபவர்களாகி
பைத்தியமென சுட்டப்படுகிறார்கள்..
மனக்குளம்
கருணையின் ஊற்றானால்
உள்எறி கல்லால்குழம்பாது..
வெளியிலிருந்து
வீசப்படும் கல்லெதுவாலும்
கலங்காது..
தெளிவமைதியில்
ஒளிரும்
மழைக்குளம்
பாதசாரி விஸ்வநாதன்
No comments:
Post a Comment