gifted to the patient
by the nurse, while taking leave
after her day’s work
The kiss planted by the child
while retrieving a kitten
huddled in the downpour
and shrouding it in her rags.
As the hands that embrace
physically impaired better-half
with enduring love
then and now.
As the solace to the friend
who stands there feeling ashamed
to spell out the last betrayal faced
with hopes torn apart -effaced.
The word uttered by the Mother
for the heartless son
in front of the people gathered
“Poor boy, he had an arduous trip
Thus
It can be anything, I avow
caressing my face with your eyes
that swirl like Music
When you ask
what means Love
பணி மீளும் தாதியொருத்தி விடைபெறுகையில்
நோயாளிக்குப் பரிசளிக்கிற
அன்றைய இரவை வெல்லும் நம்பிக்கையூட்டும் புன்னகையாக.
பொழிமழையில் ஒடுங்கிய பூனைக்குட்டியொன்றை
சிறுமழலை தன் கிழிசலாடையில் பொதிந்து இடும்
முத்தமாக.
அங்கங்குறைந்த துணையை ஆயுள் முழுமைக்கும்
குறையா நேசத்துடன் அரவணைக்கும் கைகளாக.
உடைந்த நம்பிக்கைகள் ஏந்தி எதிர்கொண்ட கடைசி துரோகத்தைச்
சொல்லக் கூசி நிற்கும் நட்புக்கான ஆறுதலாக.
மனசில் ஈரமற்ற மகவுக்கென ஊர் முன்னே தாய் வைக்கிற
பாவம் அவனுக்கு பயணஞ்சிரமம் எனுஞ் சொல்லாக.
இப்படி எதுவுமாக இருக்கலாம் என்கிறேன்.
நீ
இசையெனச் சுழலுமுன் கண்களால் என் முகத்தை ஒற்றியபடி
காதல் என்றால் என்ன என்கையில்.
கயல்.
No comments:
Post a Comment