INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, April 4, 2025

IYARKKAI

A POEM BY
IYARKKAI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(*With correction suggested by the poet
duly incorporated)


A VISIT TO THE BOOKFAIR

Not being included in books in millions
An innocent Poem
holding my hand
comes lilting and leaping
As it halts a while
seeing the new books
Authors’ signing sessions
and photo-shoots
I pull it a little forcefully
away from those spots
Then
I threatened it a little saying
“I would make you a visiting card
in the hands of VIPs who would never
care to read”
And
From then onwards it came
all too obedient with me
silently.
And, I bought a Delhi Applam
and offered it.
The way it covered its face with that
and laughed
looked lovely, to say the least.
Of the various ways of consoling a child
Delhi Appalam never turns crumbled.
.
*Appalam – Fried Pappad


கண்காட்சிக்குப் போனோம்
********************
கோடி கோடி
புத்தகங்களிலும் சேராத ஒரு கவிதை
கையைப் பிடித்துக் கொண்டு
வெகுளியாய்த் துள்ளியாடி வருகிறது
வெளியீடுகளை
கையொப்பங்களை
படப் பதிவுகளைப் பார்த்து
தேங்குமதை
கொஞ்சம் விசையோடு
அவ்விடங்களின்று இழுத்துக் கொள்கிறேன்
பிறகு
எப்பவும் படிக்கவேப் போகாத
பிரபலங்களின் கையில்
விசிடிங் கார்டு
ஆக்கிவிடுவேன் என்று மிரட்டுகிறேன்
அதிலிருந்து
வாய்ப் பேசாமல் இழுத்த இழுப்புக்கு
ஓடிவந்த அதனிடம்
ஒரு டில்லி அப்பளம்
வாங்கிக் கொடுத்தேன்
அதைக் கொண்டு முகத்தை மூடி
சிரிப்பதைப் பார்க்க அழகாக இருந்தது
ஒரு குழந்தையைச் சமாதானப் படுத்தும் வழிகளில்
டில்லி அப்பளம்
எப்போதும் நொறுங்குவதில்லை.

இயற்கை

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET