I shed no tears for a departure
Don’t become broken-hearted
for indifferences experienced
as before
I don’t bow down
for insults suffered
Now
If I am asked to go away
I would oblige
Having nothing to say
Despite all these
the dialogues that someone
wants to carry on
and the relationships that
want to continue
there is no exertion of any sort.
That’s Why
Some
as song relished along the way
Some
as poems read to my heart’s content
Some
as novel ending with a turn
all too sudden
keep waving Goodbye.
இப்போதும்
ஒரு பிரிவுக்காக கண்கலங்குபவளில்லைதான்
உதாசீனங்களுக்காக
முன்புபோல்
மனமுடைபவளில்லைதான்
அவமானங்களுக்காக
தலைதாழ்ந்து போவளில்லைதான்
இப்போது
மறுப்பேதுமின்றி
போ என்றால் போய்விடுவேன்தான்
இருந்தும்
எவரேனும்
தொடர விரும்பும்
உரையாடல்களிலும்
நீடிக்க விரும்பும்
உறவுகளிலும்
எப் பிரயத்தனங்களுமில்லை
ஆகவேதான்
பயணத்தின் பாதைகளில்
விரும்பிக்கேட்ட பாடலாக சிலர்
ரசித்து வாசித்த
நல்ல கவிதைகளாக சிலர்
திடீர் திருப்பங்களுடன்
முற்றுப்பெற்ற நாவலாக
சிலர்
விடைபெறத்தான் செய்கிறார்கள்..
மயிலிறகு மனசு
No comments:
Post a Comment