INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, May 29, 2020

NAFLA KL'S POEM

A POEM BY 
NAFLA KL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


 The Word Poetry
is a birdie pecking and eating the ‘I’
a word that keeps wandering in search of the shadow seen when this flies
wrote its identity as Birdie.
Every time its wings fold and spread words came into being one by one.
When all those born rising up step by step and began to hold aloft the ‘I’ weight increasing it returns to ground once again.
With each dot fallen turning into an axis the veins sprouting out of it rubbing each other turning infinite elongates endlessly.
If only we manage to create some magnetic force whereby between all the words yet to be born will be drawn towards each other or move away from one another, then no need to worry about the sprouting veins.
The ‘I’s would be safeguarded.
Then, just as stone thrown in water each ‘I’ would form waves around itself.
The birdie looked down and eyed those ‘I’s which with the force of waves increasing more and more in circumference, frothing.
Should reduce the number of times wings are folded and unfolded, it muttered.
Without the fluttering of wings taken place earlier having collected how is it possible to have so many ‘I’s observed the bird’s shadow.
Being aware of the answer when the ‘I’ falls down at great speed it multiplies itself’ I observed.
Neither the Bird nor its shadow had a clue who I was.
“It is I who wrote this text’ said I.
‘This is what that creates ‘I’s said the shadow.
‘Where is ‘I’ in ‘This’ asked I.
‘they are nothing. They are the names christened by you to the words.
A bird getting into the text which you wrote being ‘I’
Shed an “ in each one of its fluttering. Strolling and floating in the wind when they occasionally got down became words. A person who collects each and every word called it poetry’ said the Bird.*
She who finished reading this shook the sheet of paper in the breeze. Except the ‘I’s all other words scattered. Due to falling, the word ‘Bird’ with wings sprouting flew.
The shadow of the Bird alone is clinging to one of the ‘I’s smeared all over the sheet and remain there hanging suspended

Nafla KL

_கவிதை என்றொரு சொல்_
நான் என்பதைக் கொத்தித் தின்னும் சிறு பறவை.
அது பறக்கையில் தெரியும் நிழல் தேடி உலவும் ஒரு சொல் தன் அடையாளத்தைப் பறவை என்றெழுதியது.
ஒவ்வொரு முறை அதன் சிறகு மடிந்து விரியும் போதும் ஒன்றொன்றாய்ச் சொற்கள் தோன்றின.
தோன்றியவை எல்லாம் மெல்ல மெல்ல மேலெழுந்து 'நான்' என்பதைத் தூக்கிப்படிக்கத் தொடங்கியதும் கனம் அதிகரித்து மீண்டும் நிலத்தை அடைகிறது.
வீழ்ந்த ஒவ்வொரு புள்ளியும் மையமானதில் அதிலிருந்து முளைக்கும் நாளங்கள் ஒன்றையொன்று உரசி முடிவிலியாகி நீண்டு கொண்டிருந்தது.
இனிமேல் தோன்றப்போகும் அத்தனை சொற்களுக்கிடையிலும் ஒன்றையொன்று தள்ளும் படியும் இழுக்கும் படியுமான
ஈர்ப்பு விசை உருவாக்கி விட்டால் முளைக்கும் நாளங்கள் பற்றிக் கவலையில்லை. நான்கள் காப்பாற்றப்படும்.
பின் ஒவ்வொரு நானும் நீரில் எறிந்த கல்லைப்போல் தன்னைச் சுற்றி அலைகளை உருவாக்கும்.
அலைகளின் ஆற்றல் கூடக்கூட நிறை தள்ளிப் பரவும் நான்களைக் குனிந்து பார்த்தது பறவை. சிறகுகளை மடித்து விரிக்கும் தடவைகளை குறைக்க வேண்டும் என்பதாக முணுமுணுத்தது.
முன்னர் நிகழ்ந்தேறிய சிறகசைப்புக்கள் தேங்கியிருக்காமல் இத்தனை நான் எப்படிச் சாத்தியம் என்றது பறவையின் நிழல்.
பதில் தெரிந்ததால் 'நான் என்ற சொல் வேகமாகக் கீழே விழும்போது அது தன்னைப் பெருக்கிக் கொள்கிறது' என்றேன்.
பறவைக்கோ, நிழலுக்கோ என்னை யாரென்று தெரியவில்லை.
'நான் தான் இந்தப் பிரதியை எழுதினேன்' என்றேன்.
'நான்களை உருவாக்குவது இதுதான்' என்றது நிழல்.
'இது என்பதில் எங்கிருக்கிறது நான்' என்று கேட்டு வைத்தேன்.
'அவையெல்லாம ஒன்றுமில்லை சொற்களுக்கு நீ சூட்டிய பெயர்கள் தான் அவை. நான் ஆக இருந்துகொண்டு நீ எழுதிய பிரதிக்குள் நுழைந்த ஒரு பறவை அதன் ஒவ்வொரு சிறகசைப்பிலும் ஒரு நானை உதிர்த்தது, அவை காற்றில் அலைந்து மிதந்து எப்போதாவது கீழிறங்கியபோது சொற்களாகின. சொற்கள் ஒவ்வொன்றையும் சேகரிக்கும் ஒருவன் இதைக் கவிதை என்றான்' என்றது பறவை. *
இதைப் படித்து முடித்தவள் காகிதத்தை காற்றில் உதறினாள். நான்களைத்தவிர மற்றைய சொற்கள் அனைத்தும் சிதறுண்டன. விழுந்ததில் பறவை என்ற சொல் சிறகு முளைத்துப் பறந்தது.
பறவையின் நிழல் மட்டும் காகிதத்தில் அப்பியிருக்கும் நான்களில் ஒன்றைப் பிடித்துத் தொங்கிக் கிடக்கிறது.
-நப்லா-






No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE