INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, May 9, 2020

MISBAH UL HAQ'S POEMS

TWO POEMS BY 
MISBAH UL HAQ

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
Doesn’t your insight realize
the rhythm of cosmic refrain
so mellifluous
Doesn’t your touch feel
heat abstract solidifying as dust
and have settled on everything
For staying alone and for seclusion
I rear a select jungle of my own
You have channelized a secret river
to hide inside that.
With each gulp of words
not exchanged,
ought not to be exchanged
a tree sprouts…
There remains darkness
under the cover of leaves.
The dark that launches
the very spirit of cosmic rhythm….
Yours and mine secret tears
might spring into river…
On its bank
the dewdrop could dissolve the dust.
Misbah Ul Haq
பிரபஞ்ச சுருதியின் லயம் குழைவதை
உணர்வதில்லையா உன் ஞானம்..
அரூப உஷ்ணம் புழுதிபோல் கெட்டி,
ஒவ்வொன்றிலும் படர்ந்திருப்பதை உணர்வதில்லையா
உன் ஸ்பரிசம்..
தனித்திருத்தலுக்கும், தனிமைக்கும்
எனக்கென தனித்த வனம் வளர்க்கிறேன்..
அதற்குள்ளே மறைந்துக் கொள்ளும்படி
ரகசிய நதியை வழிவிட்டிருக்கிறாய்..
பேசிக்கொள்ளாத, பேசக்கூடத வார்த்தைகள்
விழுங்க விழுங்க ஒரு மரம் தளிர்விடுகிறது..
இலைகளால் மூடிய இருள் இருக்கிறது..
பிரபஞ்ச சுருதியின் இயல்பை தொடக்கி வைக்கும் இருள்..
உனதும் எனதும் ரகசிய கண்ணீர்
நதியாக ஊற்றெடுக்கலாம்...
நதியின் கரையில் பனித்துளி புழுதியை கரைத்துவிடலாம்..

(2)
In my crest there is a residual sorrow
so deep-rooted in my crest
resembling a key
with the thickness of an ice-plank the sorrow remains.
Before unlocking all dreams
It melts and flows and turns frozen once again
somewhere as another key.
A traveler who keeps wandering forever
in search of a dream shrouded in
peacock-hued screen
in my staircase I had seen
He could’ve lived in my roofs known to none.
or as the dust spread inside my walls.
Cat’s face he has.
Cats always have two faces.

Misbah Ul Haq
April 30 at 3:55 AM •

என் உச்சியில் வேர்படர்ந்த துயரொன்று மிச்சமிருக்கிறது..
சாவியின் சாயலில்
பனிக்கட்டியின் தடிமனில் இருக்கும் துயரமது..
எல்லா கனவுகளின் பூட்டையும் திறக்குமுன்பே
கரைந்துருகி பிரிதொரு சாவியைப்போல எங்கோ மீண்டும் உறைந்துவிடுகிறது...
மயில் நிறத்தில் திறைமூடிய ஒரு கனவை சதாவும்
தேடியலையும் வழிப்போக்கனை என் மாடிப்படிகளில்
சந்தித்திருக்கிறேன்...
யாரும் அறியாத என் கூரைகளில் அவன் வசித்திருக்கலாம்..
அல்லது என் சுவர்களுக்குள் படர்ந்த புழுதியைப் போல..
அவனுக்கு பூனை முகம்..
பூனைகளுக்கு எப்போதும் இரண்டு முகம்..

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024