INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 28, 2020

JAMALDEEN WAHABDEEN'S POEM

A POEM BY 
JAMALDEEN WAHABDEEN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE FRAGRANT GARDEN OF SILVERY WHITE FLOWERS
Oh, lovely flowers who beautify every morn
Oh dear silvery flowers who make the sun sprinkle on us
yellow shine and bless us with laughter
When will you come to your garden?
Oh you, the lovely face of the school-garden
the college garden where you have not blossomed
lie there as a crematorium
causing great unease within.
The college soil which would wink
at the touch of your feet
wears the mask made of withered leaves
The classrooms devoid of your bloom
languish in isolation.
Even the campus trees that would be
troubled by your pranks
not giving flowers nor fruits
lie there in penance
for your resurrection.
All buildings stand there as tombs
with coffins inside.
‘Only you can give life’ _
So it is written on it.
Your chairs and tables
stand there maintaining social distance.
The Writing Board that your eyes had scanned
with letters and words not sprouting _
lie there as wasteland.
The pipes from which you drank water
and quenched your thirst
keep shedding tears
craving to see you.
My dear students! Sweet cluster of flowers!
Learning how dear school
which had nourished you with textbooks,
is starving for months at a stretch
are you feeling miserable?
Feeding on tears the college remains
as a mother separated from her child.
As a patient ailing
without eating without drinking
with her mouth tightly shut
Mother College stands there appalled
not opening her doors at all.
In the house sans wife and children
in agony indescribable
just the head of the family remains
waiting for you and switching on the lights
Who but you can realize the longing
of your teachers
waiting with turbulent hearts
Yearning to see and smell the fragrance
of you with your books….
Teacher is the gardener who makes you bloom
Without seeing the flowers his dawn will not be.
Those mean ones who crucify their teacher
as part of their merrymaking during holidays
how can they see the heart of the gardener
who creates flowers of splendour
Come and see for yourself
worried of not having you here
all over the walls
dark beard would have grown.
Oh, silvery flowers
Your fragrance is the laughter of this college.
Awaiting the arrival of the day
when one and all of you come this way
As the gardener I remain
for the fragrance to pervade here once again.
வெள்ளைப் பூவனத்தின் வாசம்.
..........................................................
ஒவ்வொரு காலைப்பொழுதையும்
அழகாக்கும் அழகுப் பூக்களே
சூரியனையும் மஞ்சள் ஒளிதெளித்து வாழ்த்திச் சிரிக்க வைக்கும்
எங்கள் வெள்ளைப்பூக்களே
நீங்கள் உங்கள் பூவனத்துக்கு வருவதெப்போது?
பள்ளிவனத்தின் அழகு முகங்களே
நீங்கள் பூக்காத கல்லூரிப்பூங்கா
மயானமாகிக்கிடந்து
மனதை உறுத்துகிறது.
உங்கள் காலடி பட்டு
கண்சிமிட்டும்
கல்லூரி மண்ணெல்லாம்
சருகுகளால்
முகக்கவசமணிந்து பயந்து கிடக்கிறது.
நீங்கள் பூக்காத வகுப்பறைகளெல்லாம்
தனிமைப்படுத்தலில் கிடந்து தவிக்கின்றன..
உங்கள் குறும்புகளால் இம்சைக்குள்ளாகும்
கல்லூரி மரங்கள்கூட
பூக்காமலும்
காய்காமலும்
நோன்பு நோற்றுக்கிடக்கின்றன
உங்கள் மீள்வருகைக்காய்.
அனைத்துக் கட்டிடங்களும்
அடக்கம் செய்யப்பட்ட
சமாதியாகிக் கிடக்கின்றன
உங்களால்தான் உயிர்கொடுக்க முடியும் என்று
அதில் எழுதப்பட்டிருக்கிறது.
உங்களது கதிரைகளும் மேசைகளும்
காலத்தின் கட்டாயத்தால்
இடைவெளியைப் பேணிக்கிடக்கிறது.
உங்கள் கண்கள் மேய்ந்த வெண்பலகை
எழுத்துக்கள் விளையாமல்
தரிசி நிலமாகிக் காய்கிறது.
நீங்கள் தண்ணீர் குடித்து
தாகம் தீர்த்த நீர்க்குளாய்கள் சில
கண்ணீர் சிந்திக்கொண்டே இருக்கிறது
உங்களைக் காண.
மாணவப் பூக்களே
நீங்கள் பாடப்புத்தகங்களால்
உணவூட்டிய பாடசாலை
எத்தனை மாதங்கள் பட்டினி என்பதை
அறிந்து துடிக்கின்றீரோ?
கண்ணிருண்டு கிடக்கிறது கல்லூரி
பிள்ளையைப்பிரிந்த
அன்னையைப்போல..
உண்ணாது பருகாது
வாய்மூடிய நோன்பாளியாய்
வாயிலை மூடிக்கிடக்கிறாள்
கல்லூரித்தாய்.
மனைவி பிள்ளைகளில்லா வீட்டில்
வெப்பிசாரத்துடன்
ஓர் இல்லத்தரசர் மட்டும்
தினமும் விளக்கேற்றியபடி
உங்களுக்காய் காத்திருக்கிறார்.
அலையயடிக்கும் மனசோடு
உங்கள் புத்தகப் பூவாசம் காண
ஏங்கும் ஆசான்களின்
உள்ளத்து ஏக்கத்தை
நீங்களன்றி யாரறிவார்?
ஆசான்
உங்களைப் பூக்க வைக்கும் தோட்டக்காரன்.
பூக்களைப் பாராமல் அவன் பொழுது விடியாது...
விடுமுறையில் மகிழுவதாய்
ஆசானை சிலுவையில் வைத்து ஆணியடிக்கும்
அற்பர்களுக்கென்ன தெரியும்
பூக்கள் செய்யும்
தோட்டக்காரன் மனசுபற்றி!
நீங்கள் வந்து பாருங்கள்
நீங்கள் இல்லாத கவலையில்
சுவர்கள் அனைத்திலும்
கருந்தாடி வளர்த்திருக்கும்.
வெள்ளைப் பூக்களே
உங்கள் வாசம்தான்
இந்தக் கல்லூரியின் சிரிப்பு.
மொத்தாமாய் வந்து
மறுபடியும் நீங்கள் பூக்கும் நாளுக்காய்
தோட்டக்காரனாய் காத்திருக்கிறேன்
மீண்டும்
வாசம் வீச...
ஜே.வஹாப்தீன்.


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE