INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 28, 2020

THARIK THASKI(NERO)'S POEMS


THREE POEMS BY 
THARIK THASKI(NERO)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)













The house would be all alone
I should go to our house at once
Poor house
It would be languishing there feeling lonely
It used to be filled with the boisterous cries of children
and with wholesome love.
Now it would remain dumb
The house which used to listen to the tales
of all kinds of ghosts
along with the kids and go to sleep
would now be shivering in isolation.
Thinking of ghosts, terror-stricken.
Further, without ourselves our house would look
like a child which has lost its kith and kin
in a battle or disaster
and die, craving and crying for them
Alas, I should go home at once
If only we go to our house
It would become its usual self
- the butterfly beautiful.
Tharik Thaski
வீடு தனியாய் இருக்கும்
நாம் அவசரமாய்ச் செல்ல வேண்டும் நமது வீட்டிட்கு.
அது பாவம்
தனியாய் இருக்கும்.
பிள்ளைகளின் சத்தங்களால்
காதலால் நிரம்பியிருந்த வீடு
இப்போது ஊமையாய் இருக்கும்.
எல்லா இரவுகளிலும் பிள்ளைகளோடு சேர்ந்து பேய்க் கதைகள் கேட்டு உறங்கிய வீடு இப்போது தனிமையில் பேய்களுக்குப் அஞ்சி
நடுங்கிக் கொண்டிருக்கும்.
மேலும் நாமில்லாமல் நமது வீடு
போரிலோ அல்லது
ஏதோ ஓர் பேரழிவிலோ உறவுகளை
இழந்து ஏங்கி
கத்திச் சாகின்ற குழந்தை போலும் இருக்கும்.
எனவேதான்
நாம் அவசரமாய்ச் செல்ல வேண்டும்
நமது வீட்டிற்கு.
நாம் சென்றால்தான்
நம் வீடு எப்போதும் போல்
வண்ணத்துப் பூச்சியாய் ஆகும்.
நீறோ

(2)
 Most of the house was burnt
Somehow those in the house and others
had extinguished the fire.
Many of those who came there running
were intent on taking video shots of it
in their mobiles.
That most of the valuables in the house were salvaged –
some observe and console the residents of the house.
Had gone in search of prey
to feed its chicks dwelling inside that house
on return,
the mother sparrow alone
keep circling the remnant of the house
squealing non-stop.
Tharik Thaski

அந்த வீட்டின் பெரும்பகுதி
எரிந்து விட்டது
எப்படியோ வீட்டவர்களும் அயலவர்களுமாய்ச் சேர்ந்து தீயினை அணைத்து விட்டார்கள்
அங்கு விரைந்தோடி வந்தவர்களில் அனேகமானவர்கள்
தங்கள் தொலைபேசிகளில்
படம் பிடித்துக் கொள்வதில் தீவிரமாகச் செயற்படுகிறார்கள்.
வீட்டிலிருந்து பெருமதிவாய்ந்த பலதையும் காப்பாற்றி விட்டதாகப் பேசி
வீட்டவர்களை
சிலர் அமைதிப் படுத்துகிறார்கள்.
அவ் வீட்டுக்குள் வசிக்கும்
தனது குஞ்சுகளுக்கு இரை தேடி வந்த
சிறு குருவி மட்டும் ஓயாமல்
வீட்டைச் சுற்றிச் சுற்றி கத்தித் திரிகிறது.
நீறோ

(3)




I set out homeward from my workspot

As going away from the battlefront or the land of fools
as usual my feelings lose their birds and wade through.
Feeling deprived of the birds I enter inside my house.
From kitchenette comes my better-half hurriedly
With her face brimming with poems and flower-gardens
she enquires after my wellbeing.
All over the walls my son has stuck the drawings he had scribbled
As butterflies swarming there they prove soothing to my eyes.
Holding my hand and dragging me along
showing each of those, as a butterfly he flies.
Now all my feelings and emotions are beautified
and being rejoiced by their birds.
Yet, tomorrow also I would go
to the land where those wonderful birds
I would have to forego.
Tharik Thaski
April 6, 2018 •
வேலைத் தளத்திலிருந்து வீட்டிற்குப் புறப்படுகிறேன்
போர்க் களத்திலிருந்து அல்லது முட்டாள்களின் தேசத்திலிருந்து வெளியேறுவதாக எப்போதும் போலவே
உணர்வுகள் அதன் பறவைகளை
இழந்து செல்கிறது.
பறவைகள் இல்லாத உணர்வுகளோடு
வீட்டிற்குள் நுழைகிறேன்
சமையல் கட்டிலிருந்து விரைந்து முன்னே வருகிறாள் மனைவி.
அவள் முகத்தினில் கவிதைகளை, பூந்தோட்டங்களை வைத்துக் கொண்டு
நலம் விசாரிக்கிறாள்.
அறைச் சுவர்களிலெல்லாம்
தான் கிறுக்கிய சித்திரங்களை ஒட்டி வைத்திருக்கிறான் மகன்.
அவைகள் சுவர்களில் வண்ணத்துப்பூச்சிகள் மொய்த்திருப்பது போல் கண்களில் இதமாகிறது.
என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு
சித்திரங்கள் ஒவ்வொன்றையும் காண்பித்து வண்ணத்தியாகவே பறக்கிறான் அவன்.
இப் பொழுதில் உணர்வுகளை அதன் பறவைகளெல்லாம் அலங்கரித்து மகிழ்கின்றன.
ஆனபோதும் நாளையும் நான் செல்வேன்
உணர்வுகளின் பறவைகளை தொலைத்துவிடும் அத் தேசத்திற்கு.
நீறோ




No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024