INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, May 9, 2020

SUGANYA GNANASOORY'S POEM

A POEM BY 
SUGANYA GNANASOORY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE MOON METAMORPHOSING!


I strive to give shape and form
to the poem that impregnated me
in the well of a night
when I chanced to wake up.
I search for words
The words for the poem keep splitting open
and piercing through
waves of memory.
Something formless
or some figure unfamiliar
it must have seen _
the dog barks from afar.
The owl’s scream too is heard
intermittently.
In the sheds adjacent
some with sleep eluding.
Even after the cry comes to a stop
inside the cradle
the soft sob continuing
She in that shed viewed by the full moon
sings the tale of a hapless refugee
in the form of lullaby.
Twining smithereen of broken glass
scattered all around
I create my poem
With scars sticking out
the moon metamorphoses
turning blood-red.

உருமாறுது வெண்ணிலவு!
முழிப்புத் தட்டிய
நடுச்சாமம் ஒன்றில்
கருக்கொண்ட கவிதைக்கு
உருக்கொடுக்க முயல்கிறேன்
வார்த்தைகளைத் தேடுகிறேன்....
நினைவலைகளைக்
கிழித்துக் கிழித்து
ஊடுருவிச் சென்ற வண்ணமிருக்கிறது
கவிதைக்கான வார்த்தைகள்!
அருவமோ
அறிமுகமில்லா உருவமோ
எதையோ கண்டிருக்க வேண்டும்
தூரத்தில் நாய் குரைக்கிறது!
ஆந்தையின் அலறலும்
அவ்வப்போது விட்டுவிட்டு
அக்கம் பக்கத்துக் கொட்டில்களில்
உறங்காமல் சிலர்.
ஏணைக்குள் அழுகை நின்றபின்னும்
அடங்க மறுக்கும் விசும்பலில்
அகதியான கதையொன்றை
தாலாட்டாய்ப் பாடுகிறாள்-அந்த
முழுநிலவு பார்க்கும் கொட்டிலுக்குள்.
நொறுங்கிச் சிதறிய
கண்ணாடிச் சில்லுகளை
கோர்த்துக் கட்டுகிறேன்
என் கவிதையை....
வடுக்கள் துருத்தியபடி
இரத்தச் சிவப்பாய்
உருமாறுது வெண்ணிலவு!
- சுகன்யா ஞானசூரி,

1 comment:

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024