INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 28, 2020

K.MOHANARANGAN'S POEMS

TWO POEMS BY 
K.MOHANARANGAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1)
THE GOLDEN DOORS
For those who for the sake of love
have got used to crave
hope and get disappointed
(should say, some kind of an incurable malady of youth)
There is an *Emotiono-Meter
that functions within as an integral limb
With its help they would well foresee the
forthcoming misfortune quite easily
When the time comes to learn that
in the grand feast of love that extends well beyond
there is nothing whatsoever to be served in their plate
half way through the meal
with residual hunger
they get up readily
and depart
Before climbing down the stairs and leave for ever
they look back once
in angst.
It is there the abyss opens
They have to encounter god’s treachery against humans.
Unable to believe what they see –
the door banging shut straight to their face
They stand their staring
Aghast.


*மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: எல்லோரும் வாழ்வில் உணரும் வலியை இழப்பை அத்தனை துல்லியமாக எடுத்துக்காட்டும் கவிதை அதை வாசிப்பவர்கள் ஒவ்வொருவருக்காகவும் எழுதப்பட்டதாகிவிடுகிறது; அவர்கள் ஒவ்வொருவ ராலும் எழுதப்பட்டதாகிவிடுகிறது.. அத்தகைய ஒரு கவிதை இது. மூல மொழியான
தமிழில் படிக்கக் கிடைப்பது ஒரு கொடுப்பினை.
ஓர் அல்ப ஆசையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
கவிதைக்கு தலைப்பு ஒரு திறவுகோலாக அமைவ தும் உண்டு. அம்பொற்கபாடம் தெளிவாகப் பிடிபட வில்லை. தெரிந்துகொண்டு மொழிபெயர்க்கும் ஆசை விடவில்லை.
கூகுளில் தேடியபோது கலிங்கத்துப் பரணி - 39இல் அம்பொற் கபாடம் என்று வருவதாகத் தகவலும் நான் நினைத்தபடியே அரிய தங்கக் கதவுகளை அது குறிப்பதான விவரமும் கிடைத்தன. [The doors are called அம்பொற் கபாடம் – that golden door.]
இந்த தங்கக்கதவுகளுக்கு தொன்ம, புராண அர்த்தங்கள் இருக்கலாம். அவை தெரிந்தால் கவிதையை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும்.
என் வாசகப் பிரதியில் அன்பின் கதவு நம் முகத்திற்கெதிராய் அறைந்துமூடப்படும் தருணங்கள் சாவிற் கொப்பானவை என்பதே கவிதையின் அடிநாதமாகப்
பிடிபட்டதால் கவிதையைப் புரிந்துகொண்ட அளவில் மொழிபெயர்க்கத் துணிந்தேன்.
Emotionometer என்று Thermo meterஐ அடியொற்றி நானே ஒரு புது வார்த்தையை உருவாக்கி கவிதை யில் பயன்படுத்தியிருக்கிறேன். poetic license of the translator!
மூல கவிதையில் வரும் ‘எதிர்பார்ப்பு’ நம்பிக்கை யாகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் ‘hope’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளேன்.
மொழிபெயர்ப்பை இன்னும் செம்மையாக்க முடியும்.
செய்வேன்.


அம்பொற்கபாடம்
______________________
அன்பின் பொருட்டு
ஏங்கவும்
எதிர்பார்த்து ஏமாறவும் பழகிவிட்டவர்களுக்கு
( எவ்வளவு முயன்றாலும்
குணப்படுத்தவியலாத
இளம்பருவத்துக் கோளாறு
என்றுதான் அதைக்
கூறவேண்டும் )
உள்ளுக்குள்
உறுப்பு போலவே
ஒட்டிக்கொண்டு இயங்கும்
உணர்வு மானி ஒன்றுண்டு
அதைக் கொண்டு
வரப்போகிற துரதிர்ஷ்டம் எதையும் அவர்கள் எளிதாக
முன்ணுர்ந்து கொள்வதுண்டு.
நேரம் கடந்தும் நீளும்
நேசத்தின் பெரு விருந்தில்
தம் தட்டில் பரிமாறுவதற்கு
இனி ஏதுமில்லை
என்பதை அறியவரும்போது
பாதியிலேயே
பசியின் மிச்சத்தோடு
எவ்வித தயக்கமுமின்றி
எழுந்து வந்துவிடுகிறார்கள்
படியிறங்கிப் போகுமுன்
பரிதவிப்போடு ஒருதரம்
திரும்பிப் பார்க்கிறார்கள்.
அங்குதான்
அந்த பாதாளம் தொடங்குகிறது
மனிதர்களுக்கு எதிரான
கடவுளின் வஞ்சகத்தை
அவர்கள் எதிரிட நேரிடுகிறது.
தமது
முகத்திற்கு முன்பாகவே
அறைந்து சார்த்தப்படும்
கதவை
நம்பவே முடியாமல்
வெறித்துப்பார்த்தபடி
விக்கித்து நின்றுவிடுகிறார்கள்.

(2)
I strove to grasp and hold
in a sheet of paper
for you
the strange bird
seated in my garden _
Between what I tried to convey
and what I did actually say
the bird had flown away .


என்

தோட்டத்தில்
உட்கார்ந்திருந்த
பெயரறியா பறவையை
உனக்காக
காகிதத்தில் பிடித்து வைக்க
முயன்றேன்
சொல்ல வந்ததற்கும்
சொல்லில் வந்ததற்கும்
நடுவில்
பறந்து போயிருந்தது
பறவை.
- க. மோகனரங்கன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024