INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, May 27, 2020

KANAGA BALAN'S TWO POEMS

TWO POEMS BY 
KANAGA BALAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
Nowhere there is relief for my self

As the mirage that offers
the illusion of water that is not
and so drags me on
So your countenance
confronting me
all along.
As the vital need of the tongue
anguished across the desert driest
Your memory that trickles
is but a perennial stream for me.
Wherever you are
remain there always.
Let your hands alone be
outstretched in my direction
facilitating embrace.
கனகா பாலன்
May 6 at 7:54 PM •
எங்கேயும் வைத்திருக்கப்படவில்லை
எனக்கானதொரு இளைப்பாறுதல்...
இல்லா நீரினை
இருப்பில் காட்டி
இழுத்துச் செல்லும் கானலையொத்தே
வந்து நிற்கிறது நின்முகம்
வழியெங்கிலும்...
வறட்சிப் பாலையில்
உழன்று கிடக்கும் நாக்கின்
அவசியத் தேவையாய்
சொட்டிடும் உந்தன் நினைவோ
பெருஞ் சுனையெனக்கு...
எங்கிருக்கிறாயோ?
அங்கேயேயிரு...!
அணைத்தலுக்கு வாட்டமாய்
கரங்கள் மட்டும்
எனதின் திசையாகட்டும்...!
***

2. ROLE-PLAY
In her wholesome forehead
She had extended the distance of her kumkum’s curve
more than usual
and had made it slightly different.
In her attires nowhere any tear
could be seen …..
In her limbs too she remained all clean…
With no distinct body-language of any sort
With her ever smiling face
Heeding to her heart’s dictate
She was extending her hands…..
Going to every house
She begs saying that she needs to
buy milk biscuit and butter biscuit for her baby
sleeping there so drained in hunger.
There is cloth for wearing
Shelter to sleep
But food to eat….?
Who at all can discern
the salt of tears that the inner sobs
of those characters broken and shattered
in roles unbecoming
shed in enduring pain.

கனகா பாலன்
April 29 at 8:09 PM •
*போர்த்திய வேடம்*
நிறைந்த நெற்றியில்
செந்நிறக் குங்குமத்தின்
ஆரத் தொலைவை அதிகமாக்கி
இயல்பைவிடச் சற்று வேறுபடுத்தியிருந்தாள்...
உடுத்தியிருக்கும் ஆடைகளில்
கொஞ்சமும் அகப்படவில்லை
எங்கேனும் சிறு கிழிசல்...
அங்கங்களிலும் அழுக்கற்றுத்தான் அவள்...
பிரத்யேக உடல்மொழியின்றி
தனக்கேயானச் சிரித்த முகத்தில்
உள்ளம் கேட்கச் சொன்னதில்
ஏந்திக் கொண்டிருந்தாள் கைகளை...
வாடித் தூங்கும்
மழலைத் தேவைக்கென
பால் பாக்கெட்டுக்கும்
பட்டர் பிஸ்கெட்டுக்குமாய்ச்
சொல்லித்தான் கேட்கிறாள்
வீடு தோறும்...
உடுத்த உடையுண்டு
உறங்க இடமுண்டு
உண்ண உணவு...?
வேண்டா வேடத்தில்
உடையும் பாத்திரங்களின்
உள்ளழுகை உதிர்க்கும்
கண்ணீரின் உப்பறிவர் எவரோ...?
#கனகாபாலன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE