INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, May 27, 2020

'KAVIGNAR' MAJEETH'S POEM

A POEM BY 
'KAVIGNAR' MAJEETH
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

TO MY MOTHER

Whenever I was sweating within
stealing the cool breeze from some garden
You fanned all over my inside _
O Mother…..
Whenever this breathing river
dried up
How you melted into tears,
O Mother….
As the finger remaining at the rim of eye-lashes
and wiping the tears away
you relieved me of my sorrows _
O Mother….
Can I ever forget you?
That my heart would never do
Do you know…?
That there lies deer down in me
the irrevocable agony
of strumming the strings of a sweet past
in a cruel present….?
My heart so vast as the sky
this land crumpled and cast away as
empty sheets …
O Mother….
wasn’t it you who said
that music for word and heart for life
provide solace…
And aren’t those very consolations
pierced my life
for any rationalist
there would be desires
dreams
are they an offense
just in my case….?
Your immeasurable love
can’t give reprieve from this angst
the shower of your affection
cannot make the nation sprout…
O Mother, the very blood flowing
in my heart….
Nothing untoward could find a place
in thy vocabulary
Just have a peep into my heart _
there lie memories of this soil
as burnt pieces of charcoal.
கவிஞர் மஜீத்
May 10 at 3:52 PM •
என் உம்மாவுக்கு
எனக்குள் வியர்க்கும் போது
எங்கோ ஒரு நந்தவனத்திலிருந்து
தென்றலை திருடிவந்து
என்னுள் ளெங்கும்....
விசிறிவிட்ட தாயே....
இந்த உயிருள்ள நதி
வற்றிப்போன போ தெல்லாம்
கண்ணீராய் கரைந்து விட்டவளே.....
இமைகளின் ஓரத்திலிருந்து கொண்டு
கண்ணீர் துடைக்கும்
ஒரு விரலாய்
என் துயரங்களை
துடைத்துவிட்டவளே...
உன்னை மறவேன்....!
என்றும் மறக்காது
என் நெஞ்சு.....!
நீ அறிவாயா.....?
இனிமையான
ஒரு இறந்தகாலத்தை
கொடுமையான
ஒரு நிகழ் காலத்தில்
மீட்டிப் பார்பதைப் போன்ற
ஒரு வேதனை
எனக்குள் ஒழிந்திருப்பதை
அறிவாயா....?
வானத்தைப் போன்ற
என் இருதயத்தை
வெறும் தாள்களைப்போல்
கசக்கி எறிந்துவிட்டது
இந்த தேசம்.....
உம்மா...
வார்த்தைக்கு இசையும்
வாழ்கைக்கு மனசும்
ஆறுதலென்று சொன்னது
நீ தானே....
அந்த ஆறுதல்கள்தானே
என் உயிரைத் துளைத்தது
எந்த பகுத்தறிவாதிக்கும்
ஆசையுண்டு
கற்பனையுண்டு
கனவுண்டு
எனக்கு மட்டும்
இவை பிழையா....?
உன் அன்பின் பாரத்தால்
இந்த வேதனை விலகாது
உன் பாசமழையால்
இந்த தேசம் முளையாது....
என் நெஞ்சின் ரத்தமே....
உன் வார்த்தைக்குள்
எந்த துயரமும் வசப்படாது....
என் இதயத்தை கொஞ்சம்
எட்டிப்பார் எரிந்து முடிந்த
காபன் துண்டுகளாய்
இந்த தேசத்தின்
நினைவுகள்.
மஜீத்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024