INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, May 9, 2020

MULLAI AMUTHAN'S POEMS

THREE POEMS BY MULLAI AMUTHAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The flowers in the yard blooming, winked
that some yield there in the kitchen garden of my better-half
Father, the sun-flower smiles at me - said she.
No way of them knowing the earthquake within me.
Will he come
Will there be the need for enduring wait
A person gave several interpretations to one cipher and left
Which is right?
That day also
She, my friend had asked
About him
He would come
My hope is so deep indeed.
I don’t want any news from thee.
I would remain silent
When there arrives the news of his departure
I should have died by then, my friend.

Mullai Amuthan
April 21, 2015 •
முற்றத்து
மலர்களெல்லாம்
பூத்தபடி கண்சிமிட்டின..
மனைவியின்
காய்கறித் தோட்டத்தில்
கொஞ்சம் விளைச்சல் என்று
சொன்னாள்.
அப்பா
சூரியகாந்திப்பூ
என்னைப்பார்த்து
புன்னகைக்கிறாதே என்று..
எனக்குள்
பூகம் இருப்பதை அவர்கள்
அறிவார்களா?
அவர் வருவாரா?
நீள் காத்திருக்கை அவசியமா?
பூச்சியம் ஒன்றை
தனக்குத் தெரிந்த
வியாகியானங்களுடன்
சொல்லிப்போனான் ஒருவன்.
எது சரி?
அன்றும்
தோழி
கேட்டிருந்தாள்.
அவரைப் பற்றி..
அவர் வருவார்..
எனது நம்பிக்கை
வைரம் பாய்ந்திருந்தது..
எந்தச் செய்தியும் உங்களிடமிருந்து வேண்டாம்..
மௌனமாகி இருப்பேன்.
அவர்
இல்லையெனும் செய்தி
வரும் போது
நான் இறந்திருக்கவேண்டும் தோழி.


(2)


The door at the entrance would open on its own
The backyard door would be broken
With the arrival of the shoe-wearing feet
My home would be wrecked.
The table-legs would turn mute.
The wall-clock would stop chiming.
All the books became frozen in fright.
They might go
One or two would remain for surveillance
Till they see me
their guns would remain fuming.
No chance of the door of our house closing.
When to come out of this book of Hồ Chí Minh
in hiding
Has the dawn come to be...
My dear daughter – please go and see .

Mullai Amuthan
April 23 at 11:21 AM •
வாசல்
தானே திறக்கும்.
கொல்லைப்புறக் கதவுகள்
உடையும்..
சப்பாத்துக் கால்களின்
வருகையுடன்
எனது வீடு
சிதிலமாகும்.
மேசைக் கால்கள் மௌனிக்கும்.
சுவர்க் கடிக்காரம்
சத்தத்தை நிறுத்திக்கொள்ளும்.
நூல்கள் அனைத்தும்
பயத்தில் உறைந்தன..
அவர்கள் போகலாம்..
காவலுக்கு ஓரிருவர் நிற்கலாம்.
என்னைக் காணும் வரை
அவர்களின் துப்பாக்கி
சூடாகவே இருக்கும்.
வீட்டின் கதவுகள்
மூடப்படும் வாய்ப்பு எனி இல்லை.
எப்போது
மறைந்திருக்கும்
இந்த ஹோசிமினின்
புத்தகத்துள்ளிருந்து வெளிவருவது?
மகளே பார்த்துச் சொல்..
விடிந்துவிட்டதா என்று..
முல்லைஅமுதன்
23/04/2020

(3)

Throughout the night
You and I remained chitchatting.
Going down we had food
at the roadside eatery……
I had come all the way from my place
for the sake of accompanying you
You would have realized this, I know.
You stood there in silence
looking at that day’s newspaper
hanging in that shop at the street corner.
I had accompanied you as someone
unaware of the silence
or the grimness tumultuous on
your countenance.
You too must’ve been thinking of father
bidding farewell
and mother standing at the door
with eyes tear-filled.
Yet
you said nothing.
Whenever I chance to see young ones
walking past, leaning on each other’s shoulder
companionship would swell so taut in me.
At least for an instant
the air, turning frozen, would remain watching
till you turn into a shell
and become nil.

Mullai Amuthan
May 7, 2019 •
இரவு முழுதும்
கதைகள் பேசியபடியே
இருந்தோம்..
கீழிறங்கி தரைவழிக் கடையில்
உணவருந்தினோம்..
உனக்காகவே
வழித்துணையாகவும் ஊரிலிருந்து
வந்தேன் என்பதை உணர்ந்திருப்பாய்..
தெருக்கோடிக்கடையில்
தொங்கிய அன்றைய
நாளிதழை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தாய்.
உன் முகத்தில்
தெறித்த மௌனத்தையோ,
இறுக்கத்தையோ
கவனிக்கத் தெரியாத
வழித்துணையாய் வந்துள்ளேன்..
அப்பா வழியனுப்பிவைத்தார் என்பதையோ,
அம்மா கண்ணீருடன்
நின்றிருந்தாள் என்ற நினைப்போ?
உனக்குள்ளும்
இருந்திருக்க வாய்ப்புண்டு.
எனினும்
பேசவில்லை..
தோளில்
தலைசாய்த்து போகும்
இளமைகளை பார்க்கும்போதெல்லாம்..
நட்பு எனக்குள்ளும் இறுகும்.
ஒருகணமேனும்
காற்றும் மூச்சடங்கி பார்த்திருக்கும்..
நீ வெடியாகிப்போகும்வரை..

.முல்லைஅமுதன்


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE