INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, May 9, 2020

A POEM BY kavignar MAJEETH

A POEM BY 
kavignar MAJEETH

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THEY WOULD STEP INSIDE SERPENTINE’S CAVERN.
Mounts of human flesh

Streams of blood
lay there all over.
Running arched and crushed
Kids climbing on it, flying kites
and floating paper-boats
_ So the earth keeps moving indeed.
A time would come _
devovouring mother would also prove delicious.
My dear brethren
Even if you chain my freedom
smashing and throwing it to dogs
Desiccating and inserting it in the eaves
Tying it in the leg of ‘traitor’
assaulting me on the marshy field
leaving me hanging in the bunch of Margo-leaves
to be consumed by the devils
Let my freedom
be dawned in my poem.
Even if you cut it to pieces using nut-cracker
slicing it with vegetable-cutter in the kitchen
the way you do a fish
putting it in hot sand and
chopping it into flakes
burn it in fire _
Scorched and screaming
darting with footwear tearing off
the Moon would land inside my nest.
Even if you stop it using the wedge
Tie it, subjecting it to whiplashes
the wind would greet me
visiting the bird's hole
or snake's burrow
where I reside.

கவிஞர் மஜீத்

April 28, 2018 •
அவை வருமே பாம்புக் குகையுள்
மனிதச்சதை மலைகளும்
இரத்த ஓடைகளும்
நிறைத்து கிடந்தது
நெறிந்து ஓடியும்
அதில் குழந்தைகளேறி
பட்டம் விட்டும்
காகிதத் தோணி விட்டும்
பூமி நகரத்தான் செய்கிறது
ஒரு காலம் வரும்
தாயை உண்பதும் சுவைதான்
சகோதர மனிதனே
என் சுதந்திரங்களை
விலங்கிலிட்டாலும்
நசுக்கி நாய்க்குப் போட்டாலும்
காயவைத்து
இறப்பில் சொருகினாலும்
ஆள் காட்டிக் காலில் கட்டி
வயல்வெளிச் சுரியில் மொத்தினாலும்
வேப்பங்குலையில் தொங்க விட்டு
பேய்க்குக் கொடுத்தாலும்
என் கவிதையுள்
கருக்கட்டும் சுதந்திரம்
பாக்குவெட்டியிலிட்டு நறுக்கினாலும்
மனையரிவாளில் செதிலடித்து
மீன்போல் வெட்டினாலும்
கடுமணலிலிட்டுக் கொத்தி
சிராய் சிராயாக பேத்தாலும்
நெருப்பிட்டு எரித்தாலும்
பத்திப் பதறி
செருப்புக் கிழியக் கிழிய ஓடிவந்து
என் கூட்டுள் விழும் நிலா
தட்டுக் குத்தியிட்டுத் தடுப்பினும்
கட்டிட்டு சவுக்கால் தண்டிப்பினும்
காற்று வந்து வணக்கம் சொல்லும்
நான் வசிக்கும்
பஞ்சான் பொந்தினுள்ளும்
பாம்புக் குகையினுள்ளும்....
மஜீத்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024