INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 28, 2020

VANNAI SIVA'S POEM

A POEM BY 
VANNAI SIVA
(Translated into English by Latha Ramakrishnan - *First Draft)

A DIALOGUE ON DREAMS
During one summer noontime
we were there sitting and chatting
about dreams continuing to be dreams alone
Till date why dreams remaining as dreams - there arise a question.
Haven’t we acted in earnest
for making dreams come true
Or, being considerate, allowing them to remain as just dreams
Or, in the grand design of Time
dreams as dreams remain
Who knows this magic chant
With the help of dreams we create more dreams
Is it because dreamless life is indeed devoid of
meaning.
Does anyone ponder over with care
the abstract form of dream
It is due to some dream or other
that I keep holding a dialogue with thee
and you with me
conversing for the sake of some dream.
Even after the dialogue ends and we return home
we keep journeying with dreams
in our own directions.
வண்ணைசிவா கவிதை
கனவுகள் பற்றிய உரையாடல்
ஒரு வெயில் காலத்து மத்திய பொழுதில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்
கனவுகள் கனவுகளாகவே நீடித்து கொண்டிருப்பதை பற்றி
இன்றளவும்
கனவுகள் கனவுகளாக இருப்பது எதனால்
கேள்வி எழுகிறது
கனவுகள் மெய்ப்பட
செயலில் இறங்கவில்லையா
அல்லது
கனவுகள் தானே
கனவோடு இருக்கட்டும் என்று கனிவாக இருந்து விட்டோமா
இல்லை காலத்தின் கோலத்தில் கனவுகள் கனவுகளாக நீடித்து கொண்டிருக்கின்றனவா
யார் அறிவார்
இந்த மாயமந்திரத்தை.
கனவை கொண்டு இன்னும்
கனவை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறோம்
கனவு அற்ற வாழ்வு
அர்த்தமற்ற வாழ்வு
என்பதாலா
யாராவது நினைத்து
பார்க்கிறார்களா என்ன
கனிவாக கனவின் மாயரூபத்தை
ஏதோ ஒருசில கனவின் பொருட்டே பேசிக்கொண்டிருக்கிறேன்
உன்னோடு நான்
நீயும் அவ்விதமே
கனவின் பொருட்டே
என்னோடு உரையாடிக் கொண்டிருக்கிறாய்
உரையாடல் முடிந்து
வீட்டுக்கு திரும்பியும்
கனவுகளோடு
பயணித்து கொண்டிருக்கிறோம்
அவரவர் திசையில்.
வண்ணைசிவா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024