INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, May 9, 2020

MOHAMED ATHEEK - SOLAIKILI'S POEM

A POEM BY 
MOHAMED ATHEEK - SOLAIKILI
( Songs of another Traveller_ 44)


One dove
Two
Three
Countless
Thousands of doves
today stand atop the roofs of schools
and pray for our children.
Our clan
I too raise my eyes partaking in the prayer of doves.
In the world where we should always be learning
The doves that want to keep seeing those
Learning always
See their dreams anew inside the school itself.
Just as children
The dove too dream of
Flying high and higher
The doves that have made as the foremost lesson of the school
how to shake off their shit
stand on the roof in rows
as students in the morning assembly.
Here the students hold their pen and shape their life.
So also the doves carrying twigs in their small beaks
enable their lives soar high.

Mohamed Atheek - Solaikili
இன்னொரு பயணியின் பாடல்கள் –44
----------------------------------------------------------------------
புறாக்களின் கனவும்
----------------------------------------------------
ஒரு புறா
இரண்டு புறா
மூன்று புறா
எண்ண முடியாது
ஆயிரம் புறாக்கள்
மூடிக்கிடக்கும் பாடசாலையின்
கூரைகளில் நின்று
பிள்ளைகளுக்காக பிரார்த்திக்கின்றன
நமது சனங்கள்
நானும் புறாக்களின் பிரார்த்தனைகளுக்கு கண்ணேந்துகிறேன்
எப்போதும் கற்றுக்கொண்டிருக்கவேண்டிய
உலகத்தில்
எப்போதும் கற்றுக்கொண்டிருப்பவர்களை
பார்த்துக்கொண்டிருக்க விரும்புகின்ற புறாக்கள்
தங்கள் பசிய கனவுகளை
பாடசாலைக்குள்ளேயே
காணுகின்றன
புறாக்களின் கனவும்
பிள்ளைகளைப் போன்று
உயர உயரப் பறப்பதாகும்
தங்கள் எச்சத்தை தட்டும்
பாடத்தை
பாடசாலையின்
முதலாவது பாடமாக்கிவிட்ட புறாக்கள்
மாணவர்கள் காலைக் கூட்டத்தில்
நிற்பதுமாதிரி
கூரைகளில் வரிசையாக நிற்கின்றன
பேனை பிடித்து மாணவர்கள்
தங்கள் வாழ்க்கையை இங்கு
கட்டமைக்கிறார்கள்
அலகுகளில் குச்சி பிடித்து புறாக்களும்
தங்களின் வாழ்க்கையை
உயரத்தில் ஆக்கிவிடுகின்றன
26.04.2020-------------------------------------

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024