INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, May 27, 2020

GOPAL NATHAN(EGATHUVAN)'S THREE POEMS

THREE POEMS BY 
GOPAL NATHAN(EGATHUVAN)

Translated by Latha Ramakrishnan(*First Draft)


1. PARIS

The city that has buried in it
the abyss of loneliness
due to the virus drops
fallen upon the old footprints
saves lungs in water and air.


The city-bred
yearning to get tanned in
the autumnal sunrays
along the Seine river
getting baked and roasted
in the humidity of the rooms.


The pigeons
so used to feed on the leftovers of
humans in parks and sanctuaries
peck at the barren land
pathetically hungry.

The clocks hanging upon
the junction towers
would conclude the moments not jam-packed
in the ticking sound of the moving hands.
The buildings turning heady in neon lights
steeped in darkness
appear as land turned alien
after a colossal ruin.
The timeless time of the virus
turning us totally locked down
with wine-cups and cigarette-bits
trying to escape in vain
Death certain.

Speechless
Wordless
With no footsteps
No sounds
No shadows
With deadly silence prevailing everywhere
the city turns sorrow-filled more and more.
Gopal Nathan
April 25 at 7:50 PM •
பாரிஸ்.
~~~~~
தனிமையின்
ஆழத்தை புதைத்து கொண்ட நகரம்.
பழைய காலடித் தடங்களில்
விழுந்த கிருமித் துளிகளால்
நீரிலிலும்,
காற்றிலும் சுவாசப்பை சேமிக்கின்றன.
இலையுதிர்க் காலத்தின்
சூரிய கதிர்களை
சென் நதியில் உடலேற்றம்
செய்து கொள்ள தவிக்கும் நகரவாசிகள்
அறைகளின் வெக்கையில் வெந்து.
பூங்காக்களிலும்,
சரணாலங்களிலும்,
மனித உணவுகளின் மிகுதிகளில்
உண்று பழக்கப்பட்ட புறாக்கள்
பசியில் வெறும் நிலத்தை கொத்துகின்றன.
நகரத்தின் சந்தித் தூண்களின் மேல்
தொங்கும் கடிகாரங்கள்
நெருக்கடியற்ற கணங்களை
முட்களின் நகரும் ஓசையில் நிறைவுறும்.
மின்னொளிகளில் போதையுற்ற கட்டிடங்கள்
இருளடந்த இரவுகளால்
பேரழிவுக்கு பின்
அந்நியப்பட்ட பூமியின் தோற்றம் .
கிருமியின் அகால தருணங்கள்
உள்ளிருப்புப்பட்ட காலத்தை
மதுக் குவளைகளுடனும்,
புகைத்தல் துண்டுகளுடனும்
வாழ்வில் தப்பிக்க முயற்சிக்கிறது.
ஒரு வெற்றியற்ற மரணம்.
எவ்வித பேச்சுகளுமற்று,
எவ்வித வார்த்தைகளுமற்று,
எவ்வித காலடிகளுமற்று,
எவ்வித சப்தங்களுமற்று
எவ்வித நிழல்களுமற்று
எல்லாவற்றிலும் நிசப்தங்கள்
நிறைந்து துக்கமுற்று போனது நகரம்.
ஏகத்துவன்.


2.TIMELESS TIME

The last moment of my life-breath
Was determined by the stench of Sulphur
Each body entrenched in the pain
of a quarter century of war
lays embedded in the line
dried by Time.
Not knowing how to get resurrected from the
War-laden land
I am a bird singing blood-soaked songs.
Steeped in the angst of malicious scars
caused by the grim period of the past,
damned into a world of depression I am lost.
The violence-filled authority of the tyrannical clan
and the miserable state of my years bygone
combined, thus making abject hapless state
a norm not to refute.
My pet dog keeps going round and round
the lifeless bodies that lay buried in
the deserted streets of
places turning nameless.
In the desolate city
My footsteps with a resolve
with none to perceive
remain numb in the frozen climate
of my dwelling.

அகாலமாகிய காலம்

என் மூச்சுக் காற்றின்
இறுதி அடக்கம் கந்தகத் துகள்களின்
நெடிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு உடல்களும்
கால் நூற்றாண்டு போர்
தந்த வலியை
காலம் உலர்த்திய கோட்டில் படிந்திருக்கிறது.
போர் உக்கிய மண்ணிலிருந்து
மீளெழுப்பம் என்பதறியாது
குருதி அப்பிய பாடல் பாடும் பறவை நான்.
கடந்த இறுக்கமான காலம்
வன்ம வடுவில் விளைந்த வேதனையில்
பிறழ்வு வாழ்வுள் சபித்து போகிறேன்.
அடக்குமுறை இனத்தின்
வன்முறை பாயும் அதிகாரம்
என்னுடைய தூர்ந்த காலத்தின்
இயலாமை
ஒரு நிர்க்கதி முடிவில் நியதியாகி விட்டது.
.
நான் வளர்த்த நாயும்,
பெயரற்றுப் போன ஊரின்
யாருமற்ற தெருக்களில்,
புதைந்திருக்கும் உடல்களை
சுற்றிச் சுற்றி துயருற்று அலைகிறது
ஏதுமில்லாத நகரில்
இலட்சியமான என்னுடைய காலடிகள்
கேட்பாரற்று
என் வீட்டின்
சூன்ய சூழலில் அடங்கிக் கிடக்கிறது.
கோ.நாதன்

***


3.THE SONG OF THE SUBMERGING ERA

WAR IS OVER
SORROW ECHOES EVERYWHERE.
*
IN BUNKERS
OPEN FIELDS
DENSE JUNGLES
BARE-LEGGED
EMPTY-HANDED
DISROBED AND DEGRADED
RETURNING TO THE BURNT RESIDUAL TERRAIN
THE CURSE OF THE CURSED CLAN?
*
THE ECHOES ARISING OUT OF THE
IRON FURNACE
BELONG TO THE CRY OF DEATH
OF THE MURDERS OF MANY A PLACE
BLISSFULLY UNAWARE OF THE SWORDS
BEING SHARPENED
AWAY GOES THE SOCIETY UNWISE.
*
IN AIR SANS ARMOUR
THE SULPHUROUS SOIL
THE FEET OF THE LAST GENERATION CHILDREN
STAMPING UPON
HAVE MILITARY BASE MANY.
WHO THE HELL IS THAT SCHEMING SWINE
WHO DUMPS POISONOUS BOMBS THERE
YET AGAIN?
*
THE DAMNED SONG WOULD WANDER
LINGERING IN THE BLOOD-SOAKED BODIES
WHY FORCE EVERYWHERE
RELIGION’S SANCTITY
IN THE NAME OF ALMIGHTY.
*
THE DOGS OF THE ASH-MOUNT
SO USED TO THE WARTIMES
HAVING NONE WADES THROUGH
THE STREETS AS USUAL
WHERE TINY BUSHES HAVE SURFACED
AND SNARLS.
THE STENCH OF FLESH PERVADES
ON ALL SIDES.
*
IN THE CITY WITHOUT WAILS
PLUCKING THE FORESTS AND SOWING THEM
ALL OVER THE CITY
IS YIELDING.
STRATEGIC WAR-MOVE?
OR
RESURRECTING THE BLOODY TRAILS OF JUNGLES
IN THE DREAMS OF THE EPOCH?
கோ. நாதன் <naathanaris@gmail.com>
Mon, May 18, 7:48 PM (2 days ago)

யுகம் புதையும் பாடல்.
~~~~~~~~~~~~~~`
***
போர் முடிவுற்றது,
எல்லாவற்றிலும் துயர் எதிரொலிக்கிறது
***
பதுங்கு குழிகளிலும்,
வெட்ட வெளிகளிலும்,
அடர் காடுகளிலும்
வெறுங் கால்களோடும்,
வெறுங் கைகளோடும்
பரி நிர்வாணப்பட்ட உடல்களோடும்
எரிந்த எஞ்சிய நிலத்துண்டுக்கே திரும்புதல்
சபிக்கப்பட்ட இனத்தின் சாபம்?
***
இரும்படி உலையிலிருந்து எழுகின்ற
எதிரொலிகள் பல ஊரின்
கொலைகளின் சாவோலங்களுக்குரியது.
கொலைகள் செய்யப்படும் கத்திகள்
தீட்டப்படுவது அறியாமல்
விலகும் அறிவொழிந்த சமூகம்?
***
ஆயுதகளற்ற காற்றில்
கடைசிச் சந்ததியின் குழந்தைகள்
கால்கள் மிதிக்கும் கந்தக நிலம் மீது
இராணுவ களஞ்சியசாலை மிகுதி
நச்சுக் குண்டுகளை மீளவும்
இறங்கும் சூத்திர பாதகன் யாரோ?
***
இரத்தம் தோய்ந்த உடல்களின்
நினைவுகளில் திரியும் பாவப்பட்ட பாடல்.
மதத்தின் புனிதத்தை
கடவுளின் பெயரில் எங்கும் திணிப்பதேனோ
***
போருண்ட காலங்களில் பழக்கப்பட்ட
சாம்பல் மேட்டு நாய்கள்
யாருமற்று
சிறு பற்றை முளைத்திருக்கும் தெருக்களை
பழக்கதோஷத்தில் சலித்து குரைக்கின்றது.
பெருகும் மோப்பத்தின் நிணம்?
***
ஒலங்களற்றிருக்கும் நகரத்தில்
காடுகளை பிடுங்கி நகரமெங்கும்
விதைத்தது துளிர்த்து கொண்டிருக்கிறது.
போரின் தந்திர உத்தி?
அல்லது
காடுகளின் இரத்த சுவடுகளை
யுகத்தின் கனவுகளின் மீள்படுத்தல்?
கோ.நாதன்
17.05.2020.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE