INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 28, 2020

KADANGANERIYAAN PERUMAL'S POEM

A POEM BY 
KADANGANERIYAAN PERUMAL

 Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Before learning how to swim, have to gulp water and cough
You are my facsimile
Even if you cause me to die
I would never abandon you, my boy
You are a pearl born of my ecstatic joy.

Saying You and I
are words redundant.
Our genes know how to go beyond.
The life of each generation
and the mode of living
and the associated virtues and values keep changing
Love and lust
holding one another and distancing
inducing to share love and commit murder – such is this world
Seasons would change
Can’t say that human love would be constant
Yet that is what keep the earth going round and round
In its name
all kinds of betrayals and justifications take place
Upon the lips of mine
renouncing everything and standing a little away
and watching bemused
a smile would sprout
Hope is its name
That is something loyal to none…
--- Kadanganeriyaan Perumal
நீச்சல் கற்றுக் கொள்ளும் முன் நீரைப்பருகி இருமியாக வேண்டும்
நீ என் பிரதி
என்னை சாகக் கொடுத்தாலும்
உன்னை எந்தவொரு கணத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்
என் சுகத்தில் உதிர்த்த முத்து நீ.
நீயென்பதும்
நானென்பதும்
அதிகபட்ச வார்த்தை
தன்னைக் கடத்திக் கொள்ளத் தெரியும்
நம் மரபணுக்களுக்கு
ஒவ்வொரு தலைமுறைக்குமான வாழ்வும்
வாழ்க்கை முறையும்
அது சார்ந்த அறமும் மாறிக் கொண்டேயிருக்கிறது
காதலும் காமமும்
ஒன்றையொன்றைப் பற்றியும் விலகியும்
அன்பு செய்யவும் கொலைபுரியவும் தூண்டும் உலகிது
பருவங்கள் மாறிப் போகும்
மனித அன்போ நிலையாயிருக்குமெனச் சொல்ல முடியாது
ஆனாலும் அதுதான் புவியைச் சுழற்றிக் கொண்டிருக்கிறது
அதன் பெயராலே அத்தனை துரோகங்களும் நியாயப் படுத்தலும் நிகழ்கிறது
யாவற்றையும் துறந்துவிட்டு
சற்றே விலகி நின்று
வேடிக்கை பார்க்கும் என் அதரங்களில்
முகிழ்க்கும் ஒரு புன்னகை
அதன் பெயர் நம்பிக்கை
அது யாரொருவருக்கும் விசுவாசமில்லாத ஒன்று...

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE