THREE POEMS BY
MULLAI AMUTHAN
மூக்கு
எனக்கு அவசியமானது.
அம்மா
சின்ன மூக்கு
என்று பிடித்து
அழகு பார்த்தது..
அப்பாவின்
சுருட்டு மனத்தை
திருட்டுத்தனமாக
மணந்து உள்ளிழுத்தது.
அவனுடன் மோதி
உடைபட்டு மூக்கால்
குருதி வடிந்த போது
பரியாரியின் கோபத்திற்கு
என் மூக்கும்
பழிச் சொல் கேட்டது..
அவ்வப்போது
வகுப்பு வாத்தியார்
மூக்கைப் பிடித்து
கோபப்பட்டபோது
மூக்குடன்
மனதும் வலித்தது.
சில சமயங்களில்
தேடப்படுபவர் பட்டியலில்
உள்ளவரின் மூக்குடன்
ஒப்பிட்ட நாட்கள்
நினைவு வந்ததும்
மறக்காத பொழுதுகள்..
எப்படியேனும்
இது என் மூக்கு..
அதன் சுவாசத்தை,
அதன்
இயங்குசக்தியை
யாருக்கும்
இலகுவாய்த்
தந்துவிடமுடியாது
என் தாய்
நிலத்தைப்போல..
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
Nose is something very essential for me.
Lovely tiny nose – so mother would hold it
and fondly marvel at.
It had stealthily inhaled the smell of father’s cigar.
Fighting with that fella and breaking
when blood streamed out of my nose
for the fury of ‘Pariyaari’
my nose too suffered slander.
When every now and then
my class teacher twisted my nose in anger
Not just the nose but my heart too ached.
Those instances
reminiscent of
my nose being compared with
someone in the ‘Wanted List’
remain unforgettable.
Whatever be the case
Its breath
Its dynamic force
I can’t give away for anything.
It is my own nose
as my own native soil
that my heart holds so close.
Mullai Amuthan
May 17, 2014 •
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: //கவிஞர் முல்லை அமுதனின் இந்தக் கவிதை ஒரு பார்வைக்கு எளிதாக இருந்தாலும் மூக்கை பாடுபொருளாக எடுத்துக்கொண்டதன் மூலம் இது சுவாசம், உயிர் என்பதையும் தாய்மண்ணையும் குறிப்புணர்த்துகிறது. ஒரு விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லவருவதைக் காட்டிலும் இவ்வாறு குறிப்புணர்த்துவதே நிறைய வரியிடை வரிகளை வாசகர்களுக்குக் கிடைக்கச்செய்வதாக ஒரு வாசகராக எனக்குத் தோன்றுகிறது. இறுதி மூன்று வரிகளை நான் மொழிபெயர்த்திருப்பதில் ஒரு பொழிப்புரைத்தன்மையை உணரமுடிகிறது. ஆனால், மூல கவிதையில் உள்ளவாறு மொழிபெயர்த்தால் அர்த்தம் குழம்புமோ என்ற எண்ணத்தில் அப்படிச் செய்தேன்.
மூக்கு
எனக்கு அவசியமானது.
அம்மா
சின்ன மூக்கு
என்று பிடித்து
அழகு பார்த்தது..
அப்பாவின்
சுருட்டு மனத்தை
திருட்டுத்தனமாக
மணந்து உள்ளிழுத்தது.
அவனுடன் மோதி
உடைபட்டு மூக்கால்
குருதி வடிந்த போது
பரியாரியின் கோபத்திற்கு
என் மூக்கும்
பழிச் சொல் கேட்டது..
அவ்வப்போது
வகுப்பு வாத்தியார்
மூக்கைப் பிடித்து
கோபப்பட்டபோது
மூக்குடன்
மனதும் வலித்தது.
சில சமயங்களில்
தேடப்படுபவர் பட்டியலில்
உள்ளவரின் மூக்குடன்
ஒப்பிட்ட நாட்கள்
நினைவு வந்ததும்
மறக்காத பொழுதுகள்..
எப்படியேனும்
இது என் மூக்கு..
அதன் சுவாசத்தை,
அதன்
இயங்குசக்தியை
யாருக்கும்
இலகுவாய்த்
தந்துவிடமுடியாது
என் தாய்
நிலத்தைப்போல..
(2)
That which appeared as drizzle
turned out to be torrential downpour.
Mother brought a big copper vessel
and managed the roof-leak.
The faint voice of Ganapathiar saying
that trees were uprooted
and the wind was blowing deliriously
reached her who was sitting near the window.
Father lay there huddled in a corner
very much like a corpse.
‘Rain should stop, should get into the town
Something needed to light the stove.
The last voice too said
“Mother, I am hungry”
and turned silent.
Was Mother a perennial fountain
to breastfeed the crying child….
Those feet wearing boots
that barged in all too suddenly
breaking the door
dragged away elder sister
with the word ‘search’.
One of them took away,
along with mother’s copper container
her voice too.
In a house sans voice
Rain is of what use?
Mother brought a big copper vessel
and managed the roof-leak.
The faint voice of Ganapathiar saying
that trees were uprooted
and the wind was blowing deliriously
reached her who was sitting near the window.
Father lay there huddled in a corner
very much like a corpse.
‘Rain should stop, should get into the town
Something needed to light the stove.
The last voice too said
“Mother, I am hungry”
and turned silent.
Was Mother a perennial fountain
to breastfeed the crying child….
Those feet wearing boots
that barged in all too suddenly
breaking the door
dragged away elder sister
with the word ‘search’.
One of them took away,
along with mother’s copper container
her voice too.
In a house sans voice
Rain is of what use?
Mullai Amuthan
May 17, 2019 •
May 17, 2019 •
சிறு தூறலாய்
காட்சி தந்த பெருமழையாயிற்று.
அம்மா
பெரிய கிடாரமாய்
கொண்டுவந்து
கூரை ஒழுக்கைச் சரிசெய்தாள்.
மரங்கள் முறிந்ததாயும்,
காற்று பேயாய் அடிப்பதாகவும்
கணபதியர் சொல்லிப்போவது மெதுவாய்
சன்னலோரம்
குந்தியிருந்தவளுக்கும்
கேட்டது.
அப்பா மூலையில் குடங்கிப்போய்
பிணம்போலக்கிடந்தார்..
மழை விடவேண்டும்..ஊருக்குள் போகவேண்டும்..
இன்று அடுப்பெரிய ஏதாவது வேண்டும்..
கடைசிக்குரலும்
'அம்மா பசிக்குது'
சொல்லி அடங்கிப்போனது.
அம்மா என்ன ஊற்றெடுக்கும் சுரங்கமா?
அழும் குழந்தைக்குப்பால்தர...??
திடுதிப்பென்று
கதவை உடைத்துவந்த
சப்பாத்துக்கால்கள்
தேடுதல் என்று சொல்லியபடியே..
அக்காவை இழுத்த்போயினர்.
அவர்களுள் ஒருவன்
அம்மாவின் கிடாரத்துடன்
அவளின் குரலையும்
எடுத்துசென்றனர்.
குரல் வராத வீட்டில்
மழை பெய்தென்ன??
காட்சி தந்த பெருமழையாயிற்று.
அம்மா
பெரிய கிடாரமாய்
கொண்டுவந்து
கூரை ஒழுக்கைச் சரிசெய்தாள்.
மரங்கள் முறிந்ததாயும்,
காற்று பேயாய் அடிப்பதாகவும்
கணபதியர் சொல்லிப்போவது மெதுவாய்
சன்னலோரம்
குந்தியிருந்தவளுக்கும்
கேட்டது.
அப்பா மூலையில் குடங்கிப்போய்
பிணம்போலக்கிடந்தார்..
மழை விடவேண்டும்..ஊருக்குள் போகவேண்டும்..
இன்று அடுப்பெரிய ஏதாவது வேண்டும்..
கடைசிக்குரலும்
'அம்மா பசிக்குது'
சொல்லி அடங்கிப்போனது.
அம்மா என்ன ஊற்றெடுக்கும் சுரங்கமா?
அழும் குழந்தைக்குப்பால்தர...??
திடுதிப்பென்று
கதவை உடைத்துவந்த
சப்பாத்துக்கால்கள்
தேடுதல் என்று சொல்லியபடியே..
அக்காவை இழுத்த்போயினர்.
அவர்களுள் ஒருவன்
அம்மாவின் கிடாரத்துடன்
அவளின் குரலையும்
எடுத்துசென்றனர்.
குரல் வராத வீட்டில்
மழை பெய்தென்ன??
(3)
I am lost in the swelling crowd of people
Verses are searching for me.
‘That he would return’
the flowers send the message to the
roots through the plants.
He who was shaving
jerked away from sleep and rose to see.
The radio was airing an old song.
At this time
Mother would have lit the lamp.
At the street corner
wolves were gobbling the brain.
On the dining table
in a glass bowl
blood was placed
for somebody to drink
Getting late
She would be looking for me
Finding the path should return somehow.
On the lamp post
there tied and hanging – my name.
I went along
All along
the wolves went on howling.
‘That he would return’
the flowers send the message to the
roots through the plants.
He who was shaving
jerked away from sleep and rose to see.
The radio was airing an old song.
At this time
Mother would have lit the lamp.
At the street corner
wolves were gobbling the brain.
On the dining table
in a glass bowl
blood was placed
for somebody to drink
Getting late
She would be looking for me
Finding the path should return somehow.
On the lamp post
there tied and hanging – my name.
I went along
All along
the wolves went on howling.
Mullai Amuthan
May 20, 2018 •
சன நெருக்கடியில்
காணாமல் போயிருக்கிறேன்.
கவிதைகள் என்னைத்
தேடிக்கொண்டிருக்கின்றன.
மீள வருவார் என
பூக்கள்
செடிகள் வழி வேர்களுக்கு
செய்தி அனுப்பியது.
முகச்சவரம்
செய்துகொண்டிருந்தவன்
தூக்கம் கலைந்து
எழுந்து பார்த்தான்.
வானொலி
பழைய பாடலை ஒலிபரப்பிக்கொண்டிருந்தது.
இந்நேரம்
அம்மா விளக்கேற்றியிருப்பாள் .
தெருமுனையில்
நரிகள்
மூளையை கோதிக்கொண்டிருந்தன.
சாப்பாட்டு மேசையில்
கண்ணாடிக்குவளையில்
குருதி
யாரோ குடிப்பதற்காக
வைக்கப்பட்டிருந்தது.
நேரமாயிற்று..
அவள் தேடுவாள்.
பாதையைக் கண்டுபிடித்து
மீள வரவேண்டும்..
தந்திக்கம்பத்தில்
எனது பெயர்
கட்டித்தொங்கவிடப்பட்டிருந்தது.
வந்தேன்..
வழியெல்லாம்
நரிகள் ஊளையிட்டபடியிருந்தன.
May 20, 2018 •
சன நெருக்கடியில்
காணாமல் போயிருக்கிறேன்.
கவிதைகள் என்னைத்
தேடிக்கொண்டிருக்கின்றன.
மீள வருவார் என
பூக்கள்
செடிகள் வழி வேர்களுக்கு
செய்தி அனுப்பியது.
முகச்சவரம்
செய்துகொண்டிருந்தவன்
தூக்கம் கலைந்து
எழுந்து பார்த்தான்.
வானொலி
பழைய பாடலை ஒலிபரப்பிக்கொண்டிருந்தது.
இந்நேரம்
அம்மா விளக்கேற்றியிருப்பாள் .
தெருமுனையில்
நரிகள்
மூளையை கோதிக்கொண்டிருந்தன.
சாப்பாட்டு மேசையில்
கண்ணாடிக்குவளையில்
குருதி
யாரோ குடிப்பதற்காக
வைக்கப்பட்டிருந்தது.
நேரமாயிற்று..
அவள் தேடுவாள்.
பாதையைக் கண்டுபிடித்து
மீள வரவேண்டும்..
தந்திக்கம்பத்தில்
எனது பெயர்
கட்டித்தொங்கவிடப்பட்டிருந்தது.
வந்தேன்..
வழியெல்லாம்
நரிகள் ஊளையிட்டபடியிருந்தன.
முல்லைஅமுதன்
20/05/2018
20/05/2018
No comments:
Post a Comment