TWO POEMS BY
KA.NAA.SU
I too like not Poetry. Mans has taken
Many steps forward
Of them how many
Became possible through Poery
Who can determine that
And tell? Then, what for
Poem comes into being?
The prattle of language is beauty indeed
But that alone
is not enough
If enough means no other
branch of Literature would have surfaced. .
Only because it doesn’t suffice
One after another
many a literary genre have come by.
Or else
Drama, Novel, Novella, Essays
wouldn’t have come to stay
Would they?
But they also
don’t satisfy
Isn’t it so?
So only
I too pen Poetry
No art can satisfy us
Humans
They only cause craving
for more and more
Art flourishes on this premise
That God sustaining his Life to this day
Is but only possible
In this way
_ So we can say.
க.நாசுவின் கவிதை
கவிதை
எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்துவைத்துவிட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்திய மாயின
என்று யார்
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்
எதற்காகக் கவிதை தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகு தான்.
ஆனால் அது போதவே
போதாது.
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே. போதாது
என்றுதான், ஒன்றன்பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்
துறைகள்
தோன்றின – நாடகமும், நாவலும், நீள்
கதையும், கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியிராது; ஆனால் அவையும் தான்
திருப்தி தருவதில்லையே!
அதனால்
தான் நானும் கவிதை எழுதுகிறேன்
மனிதனுக்குக் கலை எதுவும் திருதி தராது
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத் தான்
தரும். கலையின்
பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே
இன்னமும் உயிர்வைத்துக் கொண்டிருப்பது
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.
‘எழுத்து’
ஜனவரி 1959
(* க.நா.சு – புதுக்கவிதைகள் (ஞானச்சேரி வெளியீடு 10-4-1989)
(2) TWO CRITICS
Both of them are reviewers
One of them mentions some book
and saying that it is very nice, worthwhile,
and everyone should read it
thereby increases my burden of responsibility.
The other one writing all too exhaustively
about the same book
giving me the impression
‘Suffice to have read the review;
no need to read the book’
reduces my burden of responsibility.
Of course both of them are reviewers.
இரு விமர்சகர்கள்
இவர்கள் இரண்டுபேருமே விமர்சகர்கள்
ஒருவன் ஏதோ புஸ்தகத்தைக் குறிப்பிட்டு இது
மிகவும் நன்றாக இருக்கிறது – ஒவ்வொருவனும்
படித்துத்தான் ஆகவேண்டும் என்று சொல்லி
என் பொறுப்புச்சுமையை அதிகரித்துவிடுகிறான்.
மற்றவன் அதே புஸ்தகத்தை அலசி அலசித்
தன் கெட்டிக்காரத்தனம் புலப்பட பலவும்
எழுதி நேரம் போய்விட்டது அவன் விமர்சனத்தைப்
படித்ததே போதும் புஸ்தகத்தைப் படிக்கவேண்டிய
அவசியமில்லையென்று என் பொறுப்பைக் குறைத்து
விடுகிறான் இருவரும் விமர்சகர்கள்தான்!
No comments:
Post a Comment