INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, February 27, 2023

VELANAIYOOR THAS

 A POEM BY

VELANAIYOOR THAS


A POET I SHOULD BE

Poets are not like us
They would chat with the sparrows
Moon Sea river Tree _ all these and
More
Their thoughts the poets are able to decipher.
Elements of Nature
Such as snow Rain Sun and more
All these and more
They contain with verse
Acting thus:
While it is scorching summer
They coolly bring rain into the poem
‘Caste? Damn it’ they would condemn
and extol equality.
Claiming that there is but a lone Almighty
they would easily go past religions
Sometimes they would even converse with God
Taking out the heart’s love they apply it in words
Through words they enthrall others
Despite being steeped in anguish
They laugh merrily in words
And they happily lead the royal life of a king
in their imagination
‘We are not anybody’s subordinates’
_ so they would rise against Power.
They know how to fix bombs in words.
Without getting wounded nt even suffering a scratch
They would stir revolution
And had waged wars on massive scale.
If won, the victory song
If lost, poems lamenting
They themselves have been writing all along.
They undoubtedly are valorous to the core
I too want to become one such
But just one thing I keep pondering over
poets too many ever
dread their respective spouse
a little too much - Alas.

நான் கவிஞனாக வேண்டும்
--------------------------------------------------------------
கவிஞர்கள்
எங்களைப்போல இல்லை
குருவிகளோடு பேசுவார்கள்
நிலவு கடல் ஆறு மரம் இவை என்ன நினைக்கின்றன
என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியும்
பனி மழை வெய்யில் என இயற்கை அம்சங்களை
கவிதையால் கட்டிப்போடுகிறார்கள்
எப்படி என்று கேட்கிறீர்களா?
கோடை எரிகிற நேரத்தில்
மழையை கவிதைக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்
சாதிகள் இல்லையடி என்று சமத்துவம் பேசுவார்கள்
ஒருவனே தேவன் என்று
மதங்களை இலகுவாக கடந்து விடுகிறார்கள்
சில சமயம் கடவுளோடும் பேசுவார்கள்
இதயத்து அன்பை எடுத்து சொற்களில் பூசி விடுகிறார்கள்
வார்த்தைகளால் மற்றவர்களை வசீகரிக்கிறார்கள்
துயரத்தின் நடுவில் இருந்தாலும்
வார்த்தைகளால் சிரித்துக் கொள்கிறார்கள்
கற்பனையிலேயே ராஜாவாக வாழ்ந்து விட்டுப் போகிறார்கள்
”நாமார்க்கும் குடியல்லோம்”
என்று அதிகாரத்திற்கெதிராக கிளர்ந்தெழுவார்கள்
சொற்களில் வெடிகளை பொருத்தவும் இவர்களுக்குத் தெரியும்
காயப்பாடாமல் ஒரு கீறால் விழாமல்
புரட்சிகளைத் துாண்டி விடுகிறார்கள்
பெரும் போர்களை நடத்தி இருக்கிறார்கள்
வென்றால் வெற்றிப் பாடலையும்
தோற்றால் துயரக் கவிகளையும்
இவர்களே எழுதிக்கொள்கிறார்கள்
எப்படிப் பார்த்தாலும் வீரம் நிறைந்தவர்கள் இவர்கள்தான்
எனவே நானும் இப்படி ஒரு கவிஞனாக வேண்டும்
ஆனால் ஒன்றைப் பற்றித்தான் யோசிக்கிறேன்
பல கவிஞர்கள் மனைவிக்கு மட்டும்
பயந்தவர்களாக இருக்கிறார்கள்.

-------------------------------------வேலணையூர்-தாஸ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024