INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 17, 2023

K.MOHANARANGAN

A POEM BY
K.MOHANARANGAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft) 


AUDIT UNDERTAKEN AT AN HOUR STEEPED IN SELF-PITY : A COPY OF THE REPORT

Always it is something that you can’t
get back in equal measure
of what you offer
Or something that you have not tried
receiving in the exact measure
that you deem to be Love
and remain anguished to the core
All the loss you have suffered
being inexperienced
would at a later stage
when you leaf through the pages
of memory
unhurriedly
you could see them recorded there
as profits!
In this weird trade
To the extent of your loss
You are prosperous;
To the extent of your reserves
You are impoverished.
க. மோகனரங்கன்
தன்னிரக்கம் மிகுந்த பொழுதொன் றில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை அறிக்கை ஒன்றின் நகல்
___________________________________
எப்போதுமே
தருகிற அளவிற்கு
திரும்பப் பெறமுடியாத
அல்லது
அப்படி பெற முயலாத
ஒன்றினையே
அன்பென்று எண்ணி
அலைகழிகிறீர்கள்!
அனுபவமின்மையால்
அடைந்த நட்டம் முழுவதும்
பிறகொரு தருணத்தில்
நீங்கள்
நினைவின் பேரேட்டைப் புரட்டி
நிதானமாகப் பார்க்கையில்
உங்கள் கணக்கில்
லாபமாக வரவு வைக்கப்பட்டிருப்பதைக்
காணலாம்!
விநோதமான இந்த வியாபாரத்தில்,
எத்தனை இழந்தீர்களோ
அத்தனைக்கு செல்வந்தர்
நீங்கள்
எவ்வுளவு சேமித்தீர்களோ
அவ்வளவுக்கு ஏழ்மையானவர்!

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE