TWO POEMS BY
THAMARAI BHARATHI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
being deceived non-stop
We are being hunted
for the sins committed
as well as for those to be committed
We have no expertise to guess the strategies
Know not how to escape them.
Cruel words delivered
in the grip of events unfolding
tear us into shreds as the teeth of hyena
In response there sprout the teeth of wolf
in us.
As animal trapped in cage
We writhe and rage.
In life we are an error in Time
occurring in between an instant
when the good and bad not known
being ignorant of the right and wrong
And with our teeth buried deep
we keep waiting with the hope
that a time would come
for the arrival of messiahs
to redeem us.
துரத்தப்படும் விலங்கின் பற்கள்
————————————————
துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்
ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்
செய்த பாவங்களுக்கும்
செய்யப் போகும் பாவங்களுக்குமாக
சேர்த்தே விரட்டியடிக்கப் படுகிறோம்
வியூகங்களை யூகிக்கும் வல்லமையை அறியோம்
வியூகங்களில் இருந்து தப்பவும்
வழியறியோம்
நிகழ்வுகளின் பிடியில்
பிரசவமாகும் குரூர சொற்கள்
கழுதைப் புலியின் பற்களாக குதறுகின்றன
பதிலுக்கு நமக்குள்
ஓநாய்களின் பற்கள் முளைத்து விடுகின்றன.
பொறியில் சிக்கிய விலங்காய்
துடிக்கிறோம்
நெறிபிறழ் நடத்தையில்
சரியென்றும் தவறென்றும்
சம பாகத்தில்
நன்றென்றும் தீதென்றும்
பிரித்தறியா தருணத்தில்
இடைவந்து போன
காலப்பிழை நாம்
மீட்பர்கள் வந்துதவும்
காலமொன்று வருமென
காத்திருக்கிறோம்
பற்கள் ஒடுங்க ஒடுங்க.
தாமரைபாரதி
29.08.2021
முதுவேனில்
இரவு.
sorrow unbearable.
Let all that borne as the deadly silence
of the ocean deep down
burst and scatter as volcanic explosion.
No need to waste words of solace
so as to make them feel at ease for a while.
But the least you can do is to talk to them
Or at least listen to them
Those moments when you could become their saviour
or a person freeing them from torment
would prove magnificent .
Please learn that there is an inner side
in each coin
Please listen keenly to the voice
of the unknown side
Secrets untold might be piled up there
Smut and filth unrevealed
might lie concealed there
Unrealized feelings of guilt
might remain hidden there
Things heinous might be waiting for
their redemption
Please listen to their voices
That itself could become
an affectionate caress
As a breakthrough or turning point
Your Words might lead those in
sorrow unleashed
to a different world that remains serene.
Hence
Speak to them, won’t you
Or at least
Listen to them please.
•
பெருந்துயரத்திருப்பவர்களிடம் பேசுங்கள்
ஆழ்கடல் மௌனமெனப் பொதித்து வைத்தவை எரிமலையென வெடித்தாவது சிதறட்டும்.
அவர்கள் சற்று ஆசுவாசம் கொள்ளட்டுமென ஆறுதல் வார்த்தைகளை நீங்கள் விரயமாக்கவேண்டாம்
குறைந்தபட்சம் பேசுங்கள்
அல்லது கேளுங்கள்
பாரமிறக்கும் மீட்பராகவோ
துயர்நீக்கும் நபராகவோ நீங்கள் மாறக்கூடும் தருணங்கள் அற்புதமானவை
ஒவ்வொரு நாணயத்திலும் உட்பக்கமொன்று இருப்பதை அறியுங்கள்
அறியப்படாத பக்கத்தின் குரலை உற்றுக் கேளுங்கள்
சொல்லப்படாத அந்தரங்கங்கள் குவிந்து கிடக்கலாம்
சொல்லப்படாத அசிங்கங்கள் மறைந்து கிடக்கலாம்
உணரப்பட்ட குற்றவுணர்வுகள்
ஒளிந்து கிடக்கலாம்
வெளியாகாத கீழ்மைகள்
விமோசனத்திற்காகக் காத்திருக்கலாம்
கேளுங்கள் அவர்கள் கூக்குரலை
அதுவே ஒரு தலைகோதலாகலாம்
மடைமாற்றமென உங்கள் சொற்கள்
பெருந்துயரத்திலிருப்பவர்களை
வேருலகிற்குக் கூட்டிச்செல்லலாம்
ஆகவே
பேசுங்கள்
அல்லது
கேளுங்கள் குறைந்தபட்சம்.
தாமரைபாரதி
No comments:
Post a Comment