INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 17, 2023

KANIAMUDHU AMUTHAMOZHI

 TWO POEMS BY

KANIAMUDHU AMUTHAMOZHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1) DIGITAL DIALOGUE
Kinship formed of voices umpteen
with faces unseen
greet us day-in and day-out
Wishing us to have a day joyous and carefree.
Gifting sweet dreams to our nights
With children begotten
leaving us in search of a life of their own
For the voices that sound
to fill our aloneness
Needs abound.
As Mother
Or, Sister
Or dear
Or Sweetie
Or Daddy
Or
Brother
Or
My Man
Or Hey, Darling
Calls through net
Free of cost.
In a life where
connecting People
is the Prime Motive of all Networks
Amazon
Beachmode
Milagrow
Human touch
Robotic Feel
_So on and so forth
Absolutely free
Anyone can talk with anyone
Can melt
Listening to one’s sad tale
Can console, speaking soothing words
Love they can share
Shed tears profusely
Wail and lament
Face not a must
For these voice-born kith and kin
If some relation
proves troublesome
Simple is the solution
No need to struggle hard
crushing the concerned vocal cord.
Suffice to disconnect the net
At once
the digital clan
would go beyond too long a distance
முகம் தெரியாத
குரல் வழி உறவுகள்
தினமும் நம் நாள்
இனிதாக வாழ்த்துகிறது
நம் இரவுகளுக்கு
இனிய கனவுகளை
பரிசளிக்கிறது
பெற்ற குழந்தைகள்
வாழ்க்கைத் தேடலின்
கட்டாயத்தில்
பிரிந்து போக
தனிமையை நிறைக்க
ஒலிக்கும் குரல்களுக்கு
தேவைகள் அதிகம்
அம்மா என்றோ
அக்கா என்றோ
அன்பே என்றோ
அடியே என்றோ
அப்பா என்றோ
அண்ணா என்றோ
அன்பரே என்றோ
அடேய் என்றோ
அழைப்புகள்
இணையவழி
இலவசம்
கனெக்டிங் பீப்புள்
பிரைம் மோட்டிவ் ஆஃப்
ஆல் நெட்வொர்க்ஸ்
ஆன வாழ்வில்
அமேசான்
பீச் மோட்
மிலாகுரோ ஹ்யூமன் டச்
ரோபாட்டிக் ஃபீல்....
இத்யாதிகள் இலவச இணைப்பு
யாரும் யாருடனும்
கதைக்கலாம்
கதை கேட்டு உருகலாம்
ஆறுதல் கூறி தேற்றலாம்
அன்பாய் நேசம் பகிரலாம்
கண்ணீர் விட்டு கதறலாம்
முகம் வேண்டும் என்பதில்லை
இந்த குரல் வழி உறவுகளுக்கு
உபத்திரவம் அளிக்கிறது
என்றால் வெரி சிம்பிள்
குரலை நெரிக்கும்
சிரமம் வேண்டாம்
இணையத்தை துண்டித்தால்
போதும் தூரமாகப்
போய் விடும்
டிஜிட்டல் உறவுகள்
(2)
That the fish would revel swimming crisscross
She pours water upon the paintings of fish
drawn on the floor
The fish looking pale with colours blurred
has gone deep down the sea
says she.
As I, dumbstruck,
looked at her who drew sea on the floor
‘Let’s go into the sea’
says she
sprinkling a droplet of water
and asking me to swim.
Between my daughter dear and myself
the sea where fishes swam across
rise surging uproariously.
Amuthamozhi Mozhi
மீன்கள் நீந்தி களிக்குமென்று
தரையில் வரைந்த ஓவிய மீன்களின் மீது நீரை ஊற்றுகிறாள்
கலங்கிய வண்ணங்களில் மங்கலாய் தெரியும் மீனை கடலுக்கு அடியில் போய்விட்டது என்கிறாள்
தரையில் கடலை வரைந்தவளை நான்
விக்கித்துப் பார்க்க நாமும் கடலுக்குள்
போவோம் என்று சிறு துளி நீரை தெளித்து நீந்து என்கிறாள்
எனக்கும் மகளுக்கும் இடையில் மீன்கள் நீந்திக் கடந்த ஆழி ஆர்ப்பரித்து எழுகிறது.

1 comment:

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE