INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 17, 2023

JEYADEVAN

 TWO POEMS BY

JEYADEVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1) A CUP OF LOVE
The love of one and all
are not the same
The love of some women
is like the flower with worm-snake
In laughter it is flower
If provoked, snake for sure
The love of some
is like nail-polish
Excessively elegant
Those who love in-depth
just as relishing a cup of tea
would each day leave behind
dove-feathers
on the shore where they sat and conversed
Just the way the parrot is reared with
feeding milk
Love nurtures one
feeding emotions
As cotton with the shell opened
it might also run off one fine evening
Consummate love is like the water
flowing along the canals and joining the river
Tiger’s roar
Snail’s crawl
Butterfly’s perch
Stallion’s leap
So the lovers would be in
acts myriad
But
Love is like a glass vase
that is there always
expecting ever a finger
awaiting the opportune moment to push it
Just as the deer-skin contains in it
the body-heat of he who sat upon and left
the forever young love
would stealthily store the kisses
exchanged by lovers
For he who has not loved
Time has in store
a useless walking-stick
and an umbrella unfurled.

ஒரு கோப்பை காதல்
எல்லோருடைய காதலும்
ஒரே மாதிரி இருப்பதில்லை
சில பெண்கள் காதல்
பூநாகம் மாதிரி
சிரித்தால் பூ
சீண்டினால் நாகம்
சிலருடைய காதல் நகப்பூச்சு மாதிரி
நளினமாய் இருக்கும் மிகமிக
கோப்பை தேநீரை ரசித்துக் குடிப்பவர் போல
அனுபவித்துக் காதலிப்பவர்
ஒவ்வொரு நாளும் விட்டுச்
செல்வார்கள் புறா இறகுகளை
அமர்ந்து பேசிய கடற்கரையில்
கிளிக்கு பால் ஊட்டி வளர்ப்பதுபோல
உணர்வுகளை ஊட்டிஊட்டி
வளக்கும் காதல்....
ஓடு திறந்த பஞ்சுபோல
ஓடவும் கூடும் ஒரு பொன்னந்தி பொழுதில்
வாய்க்கால் வழி ஓடி ஆற்றில் கலக்கும் தண்ணீர் போன்றது
பக்குவப்பட்ட காதல்
புலியின் உறுமல்
நத்தையின் ஊர்தல்
பட்டாம்பூச்சியின் அமர்தல்
குதிரையின் பாய்ச்சல்
என வெவ்வேறு இயக்கத்தில்
இருப்பார்கள் காதலர்கள்
ஆனால்
காதல் என்பது எப்போதும் இருக்கும்
கண்ணாடி குடுவை போல
தட்டிவிடத் தயாராய் ஒரு விரலை
எதிர் பார்த்து
தன் மேல் அமர்ந்துவிட்டுப் போனவன் உடல் சூட்டை
மான் தோல் வைத்திருப்பதுபோல
காதலர் இட்ட முத்தங்களை தன்னுள்
பதுக்கி வைத்திருக்கும்
இளமையான காதல்
காதலிக்காதவனுக்கு எப்போதும்
வைத்திருக்கும் காலம்
ஒரு உதவாத கைத்தடியையும்
விரிக்காத குடையையும்
ஜெயதேவன்

(2)

A house remote
Aloneness absolute
You feel as if someone is seated
in the empty chair
The strands of downpour so torrential
chat with you as a close pal
When all at once the rain stops
You feel as if you have lost a friend
who is bidding adieu.
When it is evening
in the aroma blowing
from somewhere
of Manoranjitham flower
Do you inhale the odour
of Vanaranjani sister
who set herself aflame
Does your heart hear the tinkling anklets
sporadically
A blank sheet stirs
as if someone is leafing through the pages
of your diary
Something eerie
You turn a little jittery
With your pen you launch
the first line of your poetry
The feeling of someone peeping intensely
and reading from behind
engulfs thee.
At the gate a thudding nose
Someone seems like removing the footwear
and entering inside.
Mind turning murkier
you feel the strolling time of the ghost
mentioned by grandma
in your childhood
has arrived.
For sure,
the fruiting stage
of your coming of age
for evolving into a poet
is all set
in right earnest.

ஒதுக்குப்புறமான வீடு
எவருமற்ற தனிமை
காலியாய் உள்ள நாற்காலியில் யாரோ அமர்ந்திருப்பது போல்
உணர்கிறீர்கள்
அடை மழைத் தாரைகள் நண்பனைப்
போல் உங்களிடம்
பேசுகின்றன
சட்டென மழை விட்டதும்
விடைபெற்றுப் போகின்ற ஒரு நணபனை இழந்தது போல் கருதுகிறீர்கள்
மாலையானதும் எங்கிருந்தோ வீசும்
மனோரஞ்சிதத்தில்
தீக்குளித்த வனரஞ்சனி அக்காவின்
வாசம் வீசுகிறதா
விட்டு விட்டு கொலுசொலி கேட்பதாக
மனதில் படுகிறதா
ஒரு வெற்றுத்தாள் அசைகிறது
யாரோ ஒருவர் உங்கள் டைரியை
புரட்டுவது போல் ஒரு அமானுஷ்யம்
உங்களுக்கு லேசான திகில்
எழுதுகோலில் கவிதையின் முதல்வரியை துவக்குகிறீர்கள்
பின்னிருந்து எவரோ உற்று வாசிக்கும் உணர்வு வருகிறது
வெளிவாசலில் சரட்டெனும் ஒலி..
யாரோ செருப்பை கழற்றிவைத்து
உள்ளே நுழைவது போல் படுகிறது
மசங்க ஆரம்பித்ததும் பாட்டி பால்யத்தில் சொன்ன பேய் நடமாடும்
நேரம் வந்து விட்டதாக நினைக்கிறீர்கள்
சந்தேகம் வேண்டாம் நீங்கள் கவிஞனாவதற்கான
பூப்பு உங்களில் பூக்கத் துவங்கிவிட்டது.

ஜெயதேவன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024