INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, February 27, 2023

KADANGANERIYAN ARIHARASUTHAN

 A POEM BY

KADANGANERIYAN ARIHARASUTHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The words that had all along been held close
with trust utmost
help me in ascending the mount
When I look back with suspicion usual of a human
Without asking “Oh you, are you doubting us
who had accompanied you all these days
not abandoning you even in the terrible abyss,
they bloom into flowers.
I embrace them with passion unleashed
and adorn me with them all over
The fragrance or stench that those
who come face-to-face
experience
is each one’s destiny.
For me nothing matters
None significant
More than my heart my legs are so melting
The container is real stark water
When you reflect your own face
In me
Don’t I know the dimesnisonsfo your countenance
So many a kinship
Hopes
Principles
Ideologies
While everything is belied and defeated
Though wading through and coming past
Cave- w ritings
Inscriptions
Palm-leaves
Printed sheets
The words that still remain the final hope of mankind
I construct those words
But
In those times when I am the one giving
the sacrificial offering
and the one who is receiving it
Everything turns a little blurred
and subsequently becomes clearer.

Kadanganeriyaan Ariharasuthan
இதுகாறும் நம்பி கைக்கொண்ட
சொற்கள் மலையேற துணை நிற்கின்றன.
மனிதக் குணத்தோடு சந்தேகித்து திரும்பிப் பார்த்தால்
அட ! அத்தனை அதல பாதாளத்தில் கூட
உன்னைக் கைவிடாமல் கூடவே வந்த
எங்களையே சந்திக்கிறாயா
எனக் கேட்காமல் பூவாக மலர்கின்றன
அத்தனை தீவிரத்துடனும்
மூர்க்கத்துடனும்
அள்ளி வாரிச் சூடிக் கொள்கிறேன்
அதனை எதிர்கொள்பவர்
அனுபவிக்கும்
நறுமணமோ
துர்வாசமோ
அவரவர் ஊழ்வினை
எனக்கு
எதுவும்
யாரும் பொருட்டில்லை
என் மனதைவிட கால்கள் அத்தனை நீர்மையானவை
பாத்திரமோ அச்சு அசல் தண்ணீர்
உங்களுடைய முகத்தையே
என்னில் பிரதிபலிக்கும் போது
எனக்குத் தெரியாதா என்னுடைய முகம் என்னவென்று
அத்தனை
உறவுகள்
நம்பிக்கைகள்
கொள்கைகள்
கோட்பாடுகள் என
யாவும் தோற்றுக் கொண்டிருக்கும் போது
குகை ஓவியங்கள்
கல் வெட்டுக்கள்
ஒலைச் சுவடிகள்
அச்சுக் காகிதங்கள் கடந்து வந்தாலும்
இன்னும் மனிதர்களின் கடைசி நம்பிக்கையாக
இருக்கும் சொற்களை சமைப்பவன் நான்
என்னவொன்று
பலி கொடுப்பவனாகவும்
அதனை ஏற்பவனாகவும்
இருக்கும் நேரங்களில்
யாவும் சற்றே குழம்பித் தெளிகின்றன.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024