INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, February 27, 2023

IYARKKAI

A POEM BY

IYARKKAI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THANKS TO THUNDERSTORM

How so much of shrunken leaves

How so many a twig

This green tree had
For shedding off all things unnecessary
A thunderstorm is essential, it seems.
For shaking one or two leaves at first
And then shaking their ribs
And their
And their branches
For taking steps with composure
and to seize it lock stock and barrel
a thunderstorm is indeed essential, it seems
A bird would soar above
A piece of paper would do the same
A bird would be reaching its nest
A piece of paper would be reaching its ground
For understanding the heights
A thunderstorm is indeed essential, it seems.
When the announcement came asking the people
to move to safer places
A woman not an insider of the people
stretches out the roadside roof and ties it taut
When the comments were being made
that the people have suffered heavy loss
She loosens her roof and folds it
For being smart
in the hour of haste
A thunderstorm is indeed essential, it seems.

இயற்கை
நன்றி புயலே
**************
- இயற்கை

எவ்வளவு சருகையும்
எவ்வளவு சுள்ளிகளையும்
இந்தப் பச்சை மரம் வைத்திருந்திருக்கிறது
தேவையற்றதை உதறிப் போட
ஒரு புயல் அவசியம்தான் போலிருக்கிறது.
முதலில் ஒன்றிரண்டு இலைகள் அசைத்து
அவற்றின் ஈர்க்குகள் அசைத்து
அவற்றின் சிமிருகள் அசைத்து
அவற்றின் கிளைகள் அசைத்து
அவற்றின் மரம் அசைத்து...
நிதானமாய் அடியெடுத்து ஆட்கொள்ள
ஒரு புயல் அவசியம்தான் போலிருக்கிறது.
மேலெழும்பும் ஒரு பறவை
மேலெழும்பும் ஒரு காகிதம்
கூடடையும் பறவை
தரை சேரும் காகிதம்
உயரங்களைப் புரிந்துகொள்ள
ஒரு புயல் அவசியம்தான் போலிருக்கிறது.
பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அறிவிப்பு வந்தபோது
பொதுமக்களுள் இல்லாத ஒருத்தி
சாலையோரக் கூரையை இழுத்துக் கட்டுகிறாள்
பொதுமக்களின் இழப்பு பெரிதென பேசிக்கொண்டிருக்கையில்
அவள் தனது கூரையைத் தளர்த்தி சுருட்டி வைக்கிறாள்
வேகத்தில் புத்தியோடிருக்க
ஒரு புயல் அவசியம்தான் போலிருக்கிறது

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE