INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, February 27, 2023

MULUMATHY MURTHALA

 A POEM BY

MULUMATHY MURTHALA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

APPLE
The demand for Apple right since the days of Adam
Is always on the uphill
In particular
The beauty of the red apples
Their mould and magnetic pull
Memories of the bygone era
associated with them are there
Forever.
Of the calls coming from home
the sweetness of daughter dear’s voice
Asking ‘Vaappaaa – Apple”
and thoughts about her
would keep troubling me
All along the travel
after the currency of our land
had become nothing
in the market-places
none seem to bother about the
call of the apple-vendors.
Both the kids love apple
The hand that usually
collect four or five apples
Now buy just one and fold into five
If stopped and stared
I would fall in love with the Egyptian apples,
it appeared
Though a few Chinese Pomegranate
can be obtained
No, not for the time being,
another day, maybe -
averred the American Dollar.
Mulumathy Murthala
அப்பிள்
-------------
ஆதாம் காலத்திலிருந்தே
அப்பிள்களுக்கு இருக்கும்
மவுசு குறையவே இல்லை
அதிலும்
சிவப்பு அப்பிள்களின் அழகும்
வார்ப்பும் அதன் மீதான ஈர்ப்பும்
தொன்ம நினைவுகளும்
மாறவே இல்லை
வீட்டிலிருந்து வரும் அழைப்புகளில்
"வாப்பா அப்பிள் " என்ற மகளின் குரல் இருக்கும்
குரலின் இனிப்பும்
மகளின் நினைப்பும் பயண வழியில்
என்னை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்
நம் நாட்டுக் காசு
கலவங்கட்டியானபிறகு
கடைத்தெருக்களில்
அப்பிள் வியாபாரிகளின் அழைப்பை
யாரும் பொருட்படுத்துவதாயில்லை
பிள்ளைகள் இருவருக்கும்
அப்பிள் என்றால் உயிர்
வழக்கமாய் நான்கைந்து அப்பிள்களை
காவிச் சென்ற கைகள்
இப்போது ஒரேயொரு அப்பிளை மட்டுமே வாங்கிக் கொண்டு ஐந்தாய் மடிகிறேன்
நின்றால்
எகிப்திய மாதுளை மீது
காதல் வந்து விடும் போலிருந்தது
சீனத்து மாதுளம் பழம் கொஞ்சம்
சாத்தியம் என்றாலும்
அதுவும் இப்போதைக்கில்லை
இன்னுமொரு நாள்
என்றது அமெரிக்கன் டொலர்.

முழுமதி எம்.முர்தளா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024