INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, February 27, 2023

MUJAHITH SHARIF(MAHA)

 A POEM BY

MUJAHITH SHARIF


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

‘Open Book’ said he
When I asked on which side
He agreed that book has no sides
The hooks that pulled and hauled from inside these wondrous magic of Words
did I engrave as fish
and made it stand in a step at the threshold.
Inside there was a sea.
A long sea said he
When asked from which side
He consented that the sea has no sides.
The heads entangled in its waves the nets
he fixed as stars and
planted it on a bigger step at the entrance.
There was a sky inside.
Stretched out sky said he
When asked which side
He consented that the sky has no sides.
The clouds eluding this slow inch by inch movements
and their roots sprouting
I embedded as pages
and erected it in a big step
at the entrance.
Inside
there was a book.

Mujahith Sharif

(* ஒரு கவிதையை சீரிய முறையில் மொழிபெயர்க்க அந்தக் கவிதையின் குறிப்புணர்த்தல் களும் புரிந்திருக்கவேண்டியது மிக அவசியம். இந்தக் கவிதையை நான் அப்படி முழுமை யாக உள்வாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்ல முடியாது. அடுத்தடுத்த வாசிப்புகளில் கவிதையின் மையத்தை இன்னும் நெருங்கமுடியலாம்; முடியாமலும் போகலாம். ஆனா லும் கவிதையை மொழிபெயர்க்கக் காரணம் இதில் ’பக்கம்’ என்ற சொற்பிரயோகம். ஆனால் அதுவே மொழிபெயர்ப்புக்கான இன்னுமொரு முட்டுக்கட்டை யாகவும் திகழ்கிறது. பக்கம் என்றால் PAGE, SIDE இரண் டையும் குறிக்கிறது. இந்த வார்த்தை விளையாட்டை மொழிபெயர்ப்பில் கொண்டுவரவே இயலாது. ஒருவேளை நிறைய மெனக்கெட்டால் கொண்டுவர முடியுமோ - தெரியவில்லை - லதா ராமகிருஷ்ணன்)


.........................................................................................................................................
திறந்த புத்தகம் என்றான்
எந்தப்பக்கமாக என்றபோது
புத்தகத்திற்கு பக்கங்கள் இல்லையென்பதை ஒத்துக்கொண்டான்
இதன் வார்த்தைகளின் மாயங்களுக்குள்
கொழுவி இழுத்த தூண்டில்களை
மீன்களாகப்பதித்து
பெரிய வாயிற்படியொன்றில் நிறுத்தினேன்
உள்ளேயிருந்தது ஒரு கடல்
நீண்ட கடல் என்றான்
எந்தப்பக்கமாக என்றபோது
கடலுக்கு பக்கங்கள் இல்லையென்பதை
ஒத்துக்கொண்டான்
இதன் அலையலையான வலைகளுக்குள்
அகப்பட்டு நெரித்த தலைகளை
நட்சத்திரங்களாகப்பதித்து
பெரிய வாயிற்படியொன்றில் நிறுத்தினேன்
உள்ளேயிருந்தது ஒரு வானம்
விரிந்த வானம் என்றான்
எந்தப்பக்கமாக என்றபோது
வானத்திற்கு பக்கங்கள் இல்லையென்பதை
ஒத்துக்கொண்டான்
இதன் மெதுமெதுவான நகர்தல்களுக்குள்
விடுபட்டு வேர்விட்ட மேகங்களை
பக்கங்களாகப்பதித்து
பெரிய வாயிற்படியொன்றில் நிறுத்தினேன்
உள்ளேயிருந்தது ஒரு புத்தகம்
~
முஜாஹித் ஷரீப்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024