TWO POEMS BY
JEYADEVAN
As always water all over the street
Whither gone my paper boats
The sea same as ever
So do the waves
Sand the same
Whither gone my sand castles
Dragonflies the same as before
Butterflies too remain the same
Sparrows fly as usual
Gone with the wind my hunt for insects.
The same foot-ball ground
River the same as ever
and so the sea-shells.
The slider too intact
Whither gone my sport
Fresh-water fish remain the same
So do the sludge-crabs
and the Spring-water – all that
Whither gone my dancing heart
Ever blooming Datura flowers
So the Cactus plant as ever
Reed-grass the same
Whither gone my amity with Vegetation
Wicker-kites call me aloud
Garden-lizard, Beetle
invite me heartily
Even the wind loves me so much
Time alone beyond my reach.
இப்போதும் அதே மழை பெய்யத்தான் செய்கிறது
இப்போதும் குளம் குட்டை
நிறையத்தான் செய்கிறது
எப்போதும் போலவே தெருவெல்லாம் தண்ணீர்
எங்கே போயின என்
காகிதப் படகுகள்
இப்போதும் அதே கடல் கடல்தான்
இப்போதும் அதே அலை அலைதான்
எப்போதும் போலவே
மணல் மணல்தான்
எங்கே தொலைந்தன
என் மணல் வீடுகள்
அன்று போல்தான் இன்றும்
தட்டான் பூச்சிகள்
அன்று போல்தான் இன்றும்
பட்டாம்பூச்சிகள்
சிட்டுக்குருவிகள் என்றும்
போலவே பறக்கின்றன
சொல்லாமல் போய் விட்டது
என் பூச்சி வேட்டை
அதே கால்பந்து மைதானம்
அதேபோல்தான் ஆறும்
கிளிஞ்சல்கள்
அதே போல்தான் சறுக்குப் பலகைகள்
ஆயினும் எங்கே போயின
என் விளையாட்டு
என்றும் போல்தான் ஆற்று மீன்கள்
என்றும் போல்தான் சேற்று
நண்டுகள்
என்றும் போலவே ஊற்றுத்
தண்ணீர்
ஆடும் மனம் எங்கே ஓடி விட்டது
இப்போதும் பூக்கின்றன
ஊமத்தம் பூக்கள்
இப்போதும் காய்க்கின்றன
கள்ளிச் செடிகள்
எப்போதும் போல்தான்
நாணற்புற்கள்
எங்கே தாவரங்களுடனான
என் சிநேகம்
ஓலைக் காற்றாடிகள் என்னை
உரக்க அழைக்கின்றன
ஓணான் வண்டுகள்
என்னைக் கூவி அழைக்கின்றன
காற்றும் கூட என்னைக் காதலிக்கிறது
காலம் மட்டும் என் கைக்கெட்டா தூரத்தில்
ஜெயதேவன்
(2)
the branch where the bird sat upon
has it still there swaying on and on
Even after grandpa rose and left
the warmth of the chair has him there still
Even after moving apart after copulating
there remains a little sex left incomplete.
Even after returning to her in-laws’ house
a daughter very much remains in her parental home.
Even after the leader has finished delivering his speech
and the crowd dispersed
He continues discoursing with those
who attended the meeting.
Even after the rain has stopped
it keeps raining in the heart.
All that are over are not that absolute
For End is ever an infinite.
பறவை ஊசாலாடிவிட்டு பறந்த
கிளையில் இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறது பறவை.
தாத்தா அமர்ந்திருந்து எழுந்த பின்னிருக்கும் நாற்காலி சூட்டிலும்
தாத்தா இருக்கிறார்.
கலவி முடிந்து விலகிய பின்னும் கொஞ்சம் எஞ்சியே இருக்கிறது நிறைவுறாத கலவி.
திருமணம் முடிந்து கணவன்
வீடு சென்ற பின்னும் மகள் இருக்கிறாள் பிறந்த வீட்டில்.
தலைவன் பேசி முடித்து கூட்டம்
கலைந்த பின்னும் இன்னும்
பேசிக் கொண்டே இருக்கிறான்
வந்தவரிடையே.
மழை நின்ற பின்னும்
மழை பெய்யவே செய்கிறது
மனதில்
முடிந்தவையெல்லாம் முற்றும் அல்ல
முற்றும் என்பது என்றும்
முடிவுறாதது.
ஜெயதேவன்
No comments:
Post a Comment