TWO POEMS BY
SHELMA PRIYADARSHAN
Elevates the sky still higher, Maayaa
I will kill this rainy season
So Mouli blossoms remain insipid
That is fit only for the stings of red wasps
Keeping the Greens in your lap and doing the needful
to make them edible
O Mekala, the riceball you smashed and gave me
a handful
I waded through a desert and there I saw
two deer lying dead in the thin stretch of water at the bay
the tubers you held in your sharp sticks and piercing and prodding
roasted and offered to me.
The whirl of wind restive everywhere
Yasodharaa I would chant your name deliriously.
When I couldn’t wade through a woodland
In the feet that set forth
not plucking the fruits on your topmost branch
_ the Nerunji thorns
The cream of your soft tissues
boiling in the nerves
The wine of intoxication distilled from the pollen
collected with your nostrils
For its perpendicular headiness Soorpanaa
the rock’s flaming heat salty meat
The tongue’s frenzy infinite
My woodland turns into the fragrant habitat
of Mouli blossoms.
When I stayed in the plain
the course of the river with you flowing on your own
everywhere
Collecting water in my palms I looked at my face
Ripping apart the heart and giving birth to young ones
Narmadha, My Love
crossing the shore crisscrossing with my stings
an infant crab I am.
நீயற்று நகரும் மேகம் ஆகாயத்தை மேலும் உயரமாக்குகிறது மாயா
நான் இந்த கார்காலத்தைக் கொல்வேன்
அதனால் மெளலிப் பூக்கள் ரசமற்றவை
அது செங்குளவிகளின் கொடுக்குகளுக்கானது
கீரைகளை மடியில் ஆய்ந்து மேகலா
நீ கைபிசைந்தள்ளித்தந்த பிடி சோறு
ஒரு பாலையை கடந்து வந்தேன்
அங்கு கண்டேன்
சுனைவாய் சிறு நீரில் இறந்துபட்ட மான்களிரண்டை
உன் கூரிய கழிகளில் குத்திக் கிளரி
சுட்டுத் தந்த கிழங்குகள்
எங்கும் நிலை கொள்ளாத காற்றின் சுழல்
யசோதரா உன் பெயர் சொல்லிப் பிதற்றுவேன்
ஒரு வனத்தைக் கடந்தேக முடியாதபோது
உன் உச்சிக் கிளையின் பழங்களை பறிக்காது கிளம்பிய
பாதங்களில் நெருஞ்சி முட்கள்
நரம்புகளில் கொதிக்கும் உன் சதைச் சாந்து
உன் மூக்கால் சேகரித்த மகரந்தங்களில்
வடித்து தந்த மதுரசம்
அதன் செங்குத்துப் போதைக்கு சூர்ப்பனா
பாறையின் தீஞ்சூட்டு உப்பு மாமிசம்
நாவின் தீராத பித்தம்
எனது கூடுகளில் செங்குளவிகள் தங்கிவிட்டன
எனது வனம் மெளலிப் பூக்களின் வாசமாகிறது
நான் சமவெளியில் தங்கியபோது
நீ எங்கும் தானாக ஓடும் நதியின் திசை
கையில் நீரள்ளி முகம் பார்த்தேன்
அலைகளில் நீஞ்சி கரையொதுஙகி
தன் நெஞ்சைப் பிளந்து குஞ்சுகளை ஈன்ற
அன்பே என் நர்மதா
கொடுக்குகளால் குறுக்காய் கரை கடக்கும் நானோர் நண்டுக் குஞ்சு.
December Memories seated in the moist shadow
Strewn all over
A strand of feather that came down
swinging and swirling from the fluttering
of the winded branch
and you safeguarded it
in your tiny hairs at the nape that
couldn’t be caught in the plaits
my breath would balance the snowy chill
In the promise we give each other
the cloud would change place causing
shades perplexed.
In the scenes of our life’s today
with colours dried up
and the sky emitting ashes
whose threshold the Panneer tree would be
obstructing now
Will that bird that had shed its feathers
be hatching yet another chick of it
Oh, what would be the total count?
The cloud that moved above our heads
The water of which pool it would have changed into.....
(*One of the three poems in the series titled A FEW TALES OF LOVE NOT IN VOGUE (நடப்பில் இல்லாத சில காதல் கதைகள்)
வர்ணம் உலர்ந்த ஞாபகங்கள்
உதிர்ந்த பன்னீர்ப்பூவின்
கசிந்த ஈரநிலில் அமர்ந்திருந்த டிசம்பர் ஞாபகங்கள்
கிளையின் இறக்கை உலுப்பலினின்று சுழன்றாடி
உன் மடியில் விழுந்த
பறவையின் சிறகொன்றை பத்திரப் படுத்தினாய்
பின்னலுக்குச் சிக்காத
உன் பிடறியின் சிறு ரோமங்களில்
என் சுவாசம் பனியைச் சமன்செய்யும்
நாம் செய்து கொள்ளும் சத்தியத்தில் வர்ணக் குழப்பங்களாய் மேகம் இடம் பெயரும்
வர்ணங்கள் உலர்ந்து
வானம் சாம்பல் உதிர்க்கும்
நம் வாழ்வின் இன்றைய காட்சிகளில்
யாரின் வாசற்படி அடைத்து நிற்கும்
அந்தப் பன்னீர் மரம்
தன் எத்தனையாவது குஞ்சை அடைகாக்கும் அந்தச் சிறகுதிர்த்த பறவை
எந்தக் குட்டையின் நீராய் உருமாறிக் கிடக்கும்
நம் தலைமேல் நகர்ந்த மேகம்
No comments:
Post a Comment